Tamil Thalaivas – Pawan Sehrawat Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும், மற்ற நான்கு அணிகள் எலிமினேட்டரில் போட்டியிடும். இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதியில் போட்டியிடுவார்கள்.
5வது இடத்தில் தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் நடப்பு சீசனில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பவன் ஷெராவத் மற்றும் சாகர் ரதி காயம் காரணமாக வெளியேறி இருந்தாலும், சமீபத்திய போட்டிகளில் அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் தலைவாஸ் அணி அதன் நேற்றைய லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லியை ஐதராபாத்தில் வைத்து சந்தித்தது. இரவு 8:30 மணிக்கு தொடங்கிய ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறியது. இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை அள்ளிக் குவித்தனர். சமபலம் பொருந்திய இந்த இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில், ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 37-37 என்ற புள்ளிகளை எடுத்தனர். இதனால் போட்டி சமனில் முடிந்தது.
Stats from what was a thriller of a match!#DELvCHE #IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #vivoProKabaddi #FantasticPanga pic.twitter.com/ES0WAzzBkj
— Tamil Thalaivas (@tamilthalaivas) November 30, 2022
இந்தப்போட்டிக்கு முன்னதாக, தமிழ் தலைவாஸ் அணி 53 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது அந்த அணி 56 புள்ளிகளுடன் அதே 5வது இடத்தில் உள்ளது. இதேபோல், 51 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்த தபாங் டெல்லி
தமிழ் தலைவாஸ் அணி வருகிற சனிக்கிழமை (டிசம்பர் 3 ஆம் தேதி) இரவு 8:30 மணி ஐதராபாத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மீண்டும் களமாடும் பவன் ஷெராவத்
இந்நிலையில், நட்சத்திர ரைடர் பவன் ஷெராவத் புரோ கபடி லீக்கிற்கு திரும்ப இருக்கிறார். ஆனால், அவர் தமிழ் தலைவாஸ் அணியில் வீரராக இல்லை. மாறாக ஒரு வர்ணனையாளராக அவர் களமாட இருக்கிறார்.
தற்போது லீக் சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளில் அவரை நிபுணர் குழுவில் சேர்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பவன் ஷெராவத் நாளை வெள்ளிக்கிழமை முதல் கேமரா முன் தோன்ற இருக்கிறார். அவரை களத்தில் வீரராக பார்க்க முடியாத நிலையில், அவரை வர்ணனையாளராக பார்க்க ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். நேரலையில் அவர் கொடுக்கும் டிப்ஸ்கள் உண்மையில் பல இளம் வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil