/indian-express-tamil/media/media_files/QsyVdNClxnYxCC2ynDIl.jpg)
ஜெய் பகவான் தனது முதல் அறிமுக தொடரில் 19 போட்டிகளில் 75 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த ரெய்டிங் புள்ளிகள் பிரிவில் 27வது இடத்தில் இருந்தார்.
pro-kabaddi-league 10 | Pawan SehrawatU Mumba Jai Bhagwan:10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வருகிற அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் ஏற்கனவே தங்களது அணிக்கு வேண்டிய வீரர்களை தக்கவைத்தும், மற்ற வீரர்களை வெளியேற்றியும் உள்ளன. இந்த வீரர்களுக்கு பதிலாக யார் யாரையெல்லாம் ஏலத்தில் வாங்கலாம் என அனைத்து அணிகளும் பலமாக திட்டமிட்டு வருகின்றன.
இந்நிலையில், 105 பி.கே.எல் போட்டிகளில் 987 புள்ளிகளைப் பெற்ற நட்சத்திர வீரரான பவன் செராவத்தை தங்களது அணி நிச்சயம் வாங்க வேண்டும் என யு மும்பா அணி வீர்ரா ஜெய் பகவான் கூறியுள்ளார்.
இளம் ரைடரான ஜெய் பகவான் யு மும்பா அணியால் எதிர்வரும் சீசனுக்காக தக்கவைக்கப்பட்டுள்ளார். அவர் தனது முதல் அறிமுக தொடரில் 19 போட்டிகளில் 75 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த ரெய்டிங் புள்ளிகள் பிரிவில் 27வது இடத்தில் இருந்தார். அவர் தனது சமீபத்திய பேட்டியில் கடினமான நேரங்களில் தங்களுக்கு வழிகாட்டக்கூடிய அனுபவமிக்க வீரர்கள் யு-மும்பாவுக்குத் தேவை என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
அவ்வகையில், நட்சத்திர வீரரான பவன் செராவத் போன்ற ஒரு வீரர்கள் தங்கள் அணியில் நிச்சம் இடம் பிடிக்க வேண்டும் என்று ஜெய் பகவான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “அணிக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நாம் சரியாக விளையாடாதபோது அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள்.
எனக்கு தனிப்பட்ட முறையில், பவன் செராவத் போன்ற வீரர்கள் எங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இந்த சீசனில் மிகவும் விலையுயர்ந்த வீரராக இருப்பார் என நான் நினைக்கிறேன்." ஜெய் பகவான் கூறியுள்ளார்.
நட்சத்திர வீரரான பவன் செராவத்தை கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி 2.26 கோடி கொடுத்து வாங்கியது. ஆனால், அவர் போட்டியின் தொடக்க ஆட்டத்தில், களமிறங்கிய 10வது நிமிடத்தில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். காயம் பெரியதாக இருந்த நிலையில், அவர் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகினார். அதனால் தமிழ் தலைவாஸ் அணி அவரை நடப்பு சீசனுக்கு முன் கழற்றி விட்டது.
தற்போது பவன் காயத்தில் இருந்து மீண்டு நல்ல ஃபார்மில் இருக்கிறார். அண்மையில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல அணியை வழிநடத்தினார். இப்போது ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கபடி அணியையும் வழிநடத்தி வருகிறார். அதனால், அவரை ஏலத்தில் வசப்படுத்த எல்லா அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. எனவே, அவரது ஏல தொகை கடந்த சீசனை விட எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.