worldcup 2023 | indian-cricket-team | mohammed-shami: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
மிரட்டல் பவுலிங் ஷமி
இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் களமாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை அவர் விளையாடியுள்ள நான்கு ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இரண்டு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
நடிகை திருமண ப்ரோபோசல்
இந்த நிலையில், இந்திய நடிகையும், அரசியல்வாதியுமான பாயல் கோஷ் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையை விதித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை பாயல் கோஷ் தனது எக்ஸ் பதிவில் ஷமியின் இரண்டாவது மனைவியாக வரத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவர் தனது ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டும் என விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
யார் இந்த பாயல் கோஷ் ?
31 வயதான பாயல் கோஷ் பிரபல பாலிவுட் நடிகை ஆவார். அவர் சில காலமாக திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார். பிராயணம் (தெலுங்கு) படத்தில் பணிபுரிவதற்கு முன்பு 'ஷார்ப்ஸ்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் ஓசரவெள்ளி என்ற படத்தில் ஒப்பந்தமாகி ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.
பாயல் கோஷ் பாலிவுட் பக்கம் திரும்புவதற்கு முன்பு மிஸ்டர் ராஸ்கல் (தெலுங்கு) படத்திலும் பணியாற்றினார். அவர் சாத் நிபானா சாதியா என்ற ஹிட் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தோன்றியுள்ளார். தமிழில் 2014ம் ஆண்டு வெளியான தேரோடும் வீதியிலே படத்திலும் நடித்துள்ளார். தற்போது அவர் ராம்தாஸ் அத்வாலேவின் அரசியல் கட்சியின் மகளிர் பிரிவின் துணைத் தலைவர் பதவியை வகித்து வருகிறார்.
ஷமி திருமணம்
முகமது ஷமி ஹசின் ஜஹானை 2014ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். திருமண துரோகம், மேட்ச் பிக்சிங் மற்றும் குடும்ப வன்முறை போன்றவற்றை குற்றம் சாட்டி ஷமி மீது ஹசின் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“