Advertisment

PBKS vs CSK: பந்துவீச்சில் அசத்திய சென்னை; 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி அபார வெற்றி

ஜடேஜா சிறப்பான ஆட்டம்; 167 ரன்கள் சேர்த்த சென்னை; பவுலிங்கிலும் அசத்தல்; 139 ரன்கள் மட்டும் சேர்த்த பஞ்சாப்; 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

author-image
WebDesk
New Update
csk vs pbks

ஐ.பி.எல் 2024: பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதல்

IPL 2024 | Chennai Super Kings | Punjab Kings: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3:30 மணிக்கு தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தொடங்கும் 53-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளன. 

Advertisment

நடப்பு தொடரில் இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள பஞ்சாப் 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. மறுபுறம், இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டு 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் சென்னை அணி உள்ளது. 

பஞ்சாப் கிங்ஸ் அணி முந்தைய 2 ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னை அணிகளை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி மிரட்டி வருகிறார்கள். குறிப்பாக, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தனர். அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதேவேளையில், கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்டு துவண்டுள்ள சென்னை அணி 3 நாட்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியுற்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும். 

அதேநேரத்தில், மும்பை இந்தியன்சுக்கு அடுத்தபடியாக சென்னை அணிக்கு எதிராக தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி கண்டு வீறுநடை போடும் பஞ்சாப் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முழுபலத்தையும் வெளிப்படுத்தும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • May 05, 2024 19:12 IST
    பந்துவீச்சில் அசத்திய சென்னை; 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி அபார வெற்றி

    பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்களையும், சிமர்ஜித் மற்றும் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்களையும், சாண்ட்னர் மற்றும் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.



  • May 05, 2024 19:09 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 20 ஓவர்கள் முடிவில் 139/9

    20 ஆவது ஓவரை ஹர்பிரீத் வீசினார். 3 ஆவது பந்தில் ரபாடா பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 19:07 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 19 ஓவர்கள் முடிவில் 132/9

    19 ஆவது ஓவரை கிளீசன் வீசினார். கடைசி பந்தில் ரபாடா சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:57 IST
    ராகுல் சாஹர் அவுட்; பஞ்சாப் கிங்ஸ்; 18 ஓவர்கள் முடிவில் 121/9

    18 ஆவது ஓவரை தாக்கூர் வீசினார். முதல் பந்தில் ஹர்பிரீத் பவுண்டரி அடித்தார். 3 பந்தில் ராகுல் சாஹர் அவுட் ஆனார். ராகுல் 16 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ரபாடா களமிறங்கினார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:55 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 17 ஓவர்கள் முடிவில் 112/8

    17 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். 3 ஆவது பந்தில் ஹர்பிரீத் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 17 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:47 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 16 ஓவர்கள் முடிவில் 105/8

    16 ஆவது ஓவரை கிளீசன் வீசினார். 3 மற்றும் 4 ஆவது பந்தில் பவுண்டரி அடித்த ராகுல் சாஹர், கடைசி பந்தில் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 14 ரன் கிடைத்தது. பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:44 IST
    ஹர்சல் படேல் அவுட்; பஞ்சாப் கிங்ஸ்; 15 ஓவர்கள் முடிவில் 91/8

    15 ஆவது ஓவரை சிமர்ஜித் வீசினார். 2 ஆவது பந்தில் சிக்சர் அடித்த ஹர்சல், 3 ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். 4 ஆவது பந்தில் ஹர்சல் அவுட் ஆனார். ஹர்சல் 12 ரன்கள் எடுத்து ரிஸ்வியிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து ராகுல் சாஹர் களமிறங்கினார். இந்த ஓவரில் 11 ரன் கிடைத்தது. பஞ்சாப் அணி 15 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:42 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 14 ஓவர்கள் முடிவில் 80/7

    14 ஆவது ஓவரை கிளீசன் வீசினார். இந்த ஓவரில் 1 ரன் கிடைத்தது. பஞ்சாப் அணி 14 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:40 IST
    அடுத்தடுத்து 2 விக்கெட்; பஞ்சாப் கிங்ஸ்; 13 ஓவர்கள் முடிவில் 79/7

    13 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். முதல் பந்தில் சாம் கரன் அவுட் ஆனார். சாம் கரன் 7 ரன்களில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து ஹர்பிரீத் களமிறங்கி 1 ரன் எடுக்க, 3 ஆவது பந்தில் அஷூதோஷ் சர்மா அவுட் ஆனார். அவர் 3 ரன்களில் சிமர்ஜித்திடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து ஹர்சல் படேல் களமிறங்கினார். இந்த ஓவரில் 2 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 13 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:37 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 12 ஓவர்கள் முடிவில் 77/5

    12 ஆவது ஓவரை சிமர்ஜித் வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 12 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:21 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 11 ஓவர்கள் முடிவில் 75/5

    11 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 11 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:19 IST
    ஜிதேஷ் அவுட்; பஞ்சாப் கிங்ஸ்; 10 ஓவர்கள் முடிவில் 72/4

    10 ஆவது ஓவரை சிமர்ஜித் வீசினார். 4 ஆவது பந்தில் ஜிதேஷ் அவுட் ஆனார். ஜிதேஷ், தோனியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்து அஷூதோஷ் களமிறங்கினார். இந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:17 IST
    பிரப்சிம்ரன் அவுட்; பஞ்சாப் கிங்ஸ்; 9 ஓவர்கள் முடிவில் 68/4

    9 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். கடைசி பந்தில் பிரப்சிம்ரன் அவுட் ஆனார். பிரப்சிம்ரன் 30 ரன்களில் ரிஸ்வியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஜிதேஷ் களமிறங்கினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:10 IST
    ஷஷாங்க் அவுட்; பஞ்சாப் கிங்ஸ்; 8 ஓவர்கள் முடிவில் 62/3

    8 ஆவது ஓவரை சாண்ட்னர் வீசினார். 5 ஆவது பந்தில் ஷஷாங்க் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் ஷஷாங்க் அவுட் ஆனார். ஷஷாங்க் 27 ரன்களில் சிமர்ஜித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து சாம் கரன் களமிறங்கினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:07 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 7 ஓவர்கள் முடிவில் 56/2

    7 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். கடைசி பந்தில் பிரப்சிம்ரன் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 18:00 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 6 ஓவர்கள் முடிவில் 47/2

    6 ஆவது ஓவரை கிளீசன் வீசினார். முதல் பந்தில் பிரப்சிம்ரன் சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். 5 ஆவது பந்தில் ஷஷாங்க் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 17:54 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 5 ஓவர்கள் முடிவில் 31/2

    5 ஆவது ஓவரை கிளீசன் வீசினார். முதல் பந்தில் ஷஷாங்க் பவுண்டரி அடித்தார். 3 ஆவது பந்தில் பிரப்சிம்ரன் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 17:50 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 4 ஓவர்கள் முடிவில் 16/2

    4 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். முதல் பந்தில் ஷஷாங்க் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 17:47 IST
    பஞ்சாப் கிங்ஸ்; 3 ஓவர்கள் முடிவில் 11/2

    3 ஆவது ஓவரை சாண்ட்னர் வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 17:43 IST
    அடுத்தடுத்து 2 விக்கெட்; பஞ்சாப் கிங்ஸ்; 2 ஓவர்கள் முடிவில் 9/2

    2 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். முதல் பந்தில் பேர்ஸ்டோ பவுண்டரி அடித்தார். ஆனால் 3 ஆவது பந்தில் போல்டானார். பேர்ஸ்டோ 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரோசாவ் 3 பந்துகளைச் சந்தித்து, இந்த ஓவரின் கடைசி பந்தில் போல்டானார். ரோசாவ் டக் அவுட் ஆனார். இதனையடுத்து ஷஷாங் களமிறங்கினார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 17:39 IST
    பஞ்சாப் கிங்ஸ்; முதல் ஓவர் முடிவில் 2/0

    பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். சென்னை தரப்பில் முதல் ஓவரை சாண்ட்னர் வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்தது.



  • May 05, 2024 17:19 IST
    பேட்டிங்கில் தடுமாற்றம்; பஞ்சாப்க்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை

    20 ஆவது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் பந்தில் ஜடேஜா பவுண்டரி விளாசினார். 3 ஆவது பந்தில் சிக்சர் அடித்தார். 4 ஆவது பந்தில் ஜடேஜா அவுட் ஆனார். ஜடேஜா 26 பந்துகளில் 43 ரன்கள் அடித்து, சாம் கரனிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து கிளீசன் களமிறங்கினார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 17:11 IST
    ஷர்துல், தோனி அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 19 ஓவர்கள் முடிவில் 151/8

    19 ஆவது ஓவரை ஹர்சல் படேல் வீசினார். 4 ஆவது பந்தில் தாக்கூர் போல்டானார். தாக்கூர் 17 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து தோனி களமிறங்கினார். தோனி முதல் பந்திலே போல்டானார். இதையடுத்து தேஷ்பாண்டே களமிறங்கினார். இந்த ஓவரில் 2 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 17:06 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 18 ஓவர்கள் முடிவில் 149/6

    18 ஆவது ஓவரை ராகுல் சாஹர் வீசினார். முதல் பந்தில் தாக்கூர் பவுண்டரி அடித்தார். 3 ஆவது பந்தில் ஜடேஜா சிக்சர் விளாசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 17:02 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 17 ஓவர்கள் முடிவில் 136/6

    17 ஆவது ஓவரை சாம் கரன் வீசினார். 2 ஆவது பந்தில் பவுண்டரி அடித்த ஷர்துல் தாக்கூர், அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:59 IST
    சாண்ட்னர் அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 16 ஓவர்கள் முடிவில் 122/6

    16 ஆவது ஓவரை ராகுல் சாஹர் வீசினார். கடைசி பந்தில் சாண்ட்னர் அவுட் ஆனார். சாண்ட்னர் 11 ரன்கள் எடுத்து, சாம் கரனிடம் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து ஷர்துல் தாக்கூர் களமிறங்கினார். இந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:52 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 15 ஓவர்கள் முடிவில் 117/5

    15 ஆவது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். 2 ஆவது பந்தில் சாண்ட்னர் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:51 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 14 ஓவர்கள் முடிவில் 109/5

    14 ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:43 IST
    மொயீன் அலி அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 13 ஓவர்கள் முடிவில் 103/5

    13 ஆவது ஓவரை சாம் கரன் வீசினார். 4 ஆவது பந்தில் மொயீன் அலி அவுட் ஆனார். மொயீன் அலி 11 ரன்களில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்தார். இந்த ஓவரில் 4 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:41 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 12 ஓவர்கள் முடிவில் 99/4

    12 ஆவது ஓவரை ரபாடா வீசினார். 3 ஆவது மற்றும் 5 ஆவது பந்துகளில் மொயீன் அலி பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:32 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 11 ஓவர்கள் முடிவில் 90/4

    11 ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். கடைசி 2 பந்துகளில் ஜடேஜா பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:31 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 10 ஓவர்கள் முடிவில் 79/4

    10 ஆவது ஓவரை ராகுல் சாஹர் வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:30 IST
    மிட்சல் அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 9 ஓவர்கள் முடிவில் 76/4

    9 ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். 5 ஆவது பந்தில் மிட்சல் எல்.பி.டபுள்யூ ஆனார். இதனையடுத்து ஜடேஜா களமிறங்கினார். இந்த ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:18 IST
    அடுத்தடுத்து 2 விக்கெட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 8 ஓவர்கள் முடிவில் 71/3

    8 ஆவது ஓவரை ராகுல் சாஹர் வீசினார். முதல் பந்தில் ருதுராஜ் அவுட் ஆனார். ருதுராஜ் 32 ரன்கள் அடித்து, ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே முதல் பந்திலே ஜிதேஷிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இதனையடுத்து மொயீன் அலி களமிறங்கினார். இந்த ஓவரில் 2 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:14 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 7 ஓவர்கள் முடிவில் 69/1

    7 ஆவது ஓவரை சாம் கரன் வீசினார். முதல் பந்தில் ருதுராஜ் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:10 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 6 ஓவர்கள் முடிவில் 60/1

    6 ஆவது ஓவரை ஹர்பிரீத் வீசினார். 2 ஆவது பந்தில் சிக்சர் விளாசிய ருதுராஜ், அடுத்த 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் மிட்சல் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:02 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 5 ஓவர்கள் முடிவில் 41/1

    5 ஆவது ஓவரை சாம் கரன் வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 16:01 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 4 ஓவர்கள் முடிவில் 34/1

    4 ஆவது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த மிட்சல், அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 15:53 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 3 ஓவர்கள் முடிவில் 22/1

    3 ஆவது ஓவரை ரபாடா வீசினார். 4 ஆவது பந்தில் ருதுராஜ் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 15:48 IST
    ரஹானே அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 2 ஓவர்கள் முடிவில் 13/1

    2 ஆவது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் பந்தில் ரஹானே பவுண்டரி அடித்தார். ஆனால் 4 ஆவது பந்தில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து, 9 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து மிட்சல் களமிறங்கினார். இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 15:36 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: முதல் ஓவர் முடிவில் 6/0

    சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ருதுராஜ் களமிறங்கினர். பஞ்சாப் தரப்பில் ரபாடா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது. 



  • May 05, 2024 15:25 IST
    இரு அணிகளின் இம்பாக்ட் ப்ளேயர்ஸ் விபரம்

    பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, தனய் தியாகராஜன், வித்வத் கவேரப்பா, ரிஷி தவான்

    சென்னை சூப்பர் கிங்ஸ்: சமீர் ரிஸ்வி, சிமர்ஜீத் சிங், ஷேக் ரஷீத், முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி



  • May 05, 2024 15:23 IST
    பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்

    பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், சாம் கரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்



  • May 05, 2024 15:22 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்

    சென்னை சூப்பர் கிங்ஸ்: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், ரிச்சர்ட் க்ளீசன், துஷார் தேஷ்பாண்டே



  • May 05, 2024 15:20 IST
    10 டாஸ்களை இழந்தாலும் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றது சாதகமானது - ருதுராஜ்

    ருதுராஜ் கெய்க்வாட்: நாங்கள் எங்கள் செயல்பாட்டில் ஒட்டிக்கொண்டு சிறிய விஷயங்களைச் சரியாகச் செய்கிறோம். எதிர் தரப்பின் சாதனைகளைப் பார்க்காமல், நம் மீது கவனம் செலுத்தி, நம்மால் சரியாக என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்கிறோம். இந்த சீசனில் நிறைய காயங்கள், காய்ச்சல் மற்றும் கட்டாய மாற்றங்கள் ஏற்பட்டதால், நாங்கள் எங்கள் அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. நான் 10 டாஸ்களை இழந்தாலும் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றது சாதகமானது என்று கூறுவேன். முஸ்தாஃபிஸுக்குப் பதிலாக சான்ட்னர் வருகிறார்.



  • May 05, 2024 15:19 IST
    டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்

    சாம் கரன்: நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். பகல் இரவு போட்டி, எனவே சேசிங் செய்ய விரும்புகிறோம். கடந்த முறை விளையாடிய அணியுடன் களமிறங்குகிறோம். நாங்கள் அதே அணியுடன் இரண்டு நல்ல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய அனைத்தும் சமமாக இருக்க வேண்டும்.



  • May 05, 2024 15:06 IST
    கடைசி 5 போட்டிகளிலும் பஞ்சாப் வெற்றி

    சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 15 முறையும், பஞ்சாப் 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் மோதிய 5 போட்டிகளிலும் பஞ்சாப் அணியே வெற்றி பெற்றுள்ளது



  • May 05, 2024 14:46 IST
    பஞ்சாப் கிங்ஸ் உத்தேச அணி

    பஞ்சாப் கிங்ஸ் உத்தேச அணி: ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ், சாம் கரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர். [இம்பாக்ட் பிளேயர்: அர்ஷ்தீப் சிங்].



  • May 05, 2024 14:37 IST
    சி.எஸ்.கே உத்தேச அணி

    சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்கூர், ரிச்சர்ட் க்ளீசன், துஷார் தேஷ்பாண்டே/முகேஷ் சவுத்ரி. [இம்பாக்ட் ப்ளேயர்: மதீஷா பத்திரனா]



Punjab Kings Chennai Super Kings IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment