IPL 2023,PBKS vs DC Live Cricket Match Score in Tamil: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று தர்மசாலாவில் நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது
Indian Premier League, 2023Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala 03 June 2023
Punjab Kings 198/8 (20.0)
Delhi Capitals 213/2 (20.0)
Match Ended ( Day – Match 64 ) Delhi Capitals beat Punjab Kings by 15 runs
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ப்ரித்வி ஷா டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டதால் டெல்லி அணி எவ்வித அழுத்தமும் இல்லாமல் தனது பேட்டிங்கை தொடங்கியது. ப்ரித்விஷா வார்னர் இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் (10.2 ஓவர்) சேர்த்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய வார்னர் 31 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரோசவ் தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார்.
மறுமுனையில் அரைசதம் கடந்த ப்ரித்விஷா, 38 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பிலிப் சால்ட் ரோசோவ்வுடன் ஜோடி சேர்ந்தார் இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்ட நிலையில், அதிரடியாகவும் விளையாடியது.
இதன் மூலம் டெல்லி அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. ரோசோவ் 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 89 ரன்களும், சால்ட் 14 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 26 ரன்களும் குவித்து களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 214 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி தொடக்கம் கொடுத்தார். அதன்பிறகு களமிறங்கிய அதர்வாக பாப்சிம்ரனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், பாப்சிம்ரன் 22 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அடுத்து லியம் லிவிங்ஸ்டன் ஒருமுறையில் அதிரடியாக விளையாட மறுமுனையில், ஜித்தேஷ் சர்மா 0, ஷாருக்கான் 6, சாம் கரன் 11, ஹர்ப்ரீத் ப்ரார் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் தனி ஆளாக வெற்றிக்கு போராடிய லிவிங்ஸ்டன், 48 பந்துகளில் 5 பவுண்டரி 9 சிக்சருடன் 94 ரன்கள் குவித்து இன்னிங்சின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில், இஷாந்த், நேர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர், கலீல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil