/indian-express-tamil/media/media_files/2025/05/08/5ozQ6fEP98vSRsoz9igk.jpg)
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இன்று வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, PBKS vs DC LIVE Cricket Score
டாஸ் போடுவதில் தாமதம்
இந்நிலையில், தர்மசாலாவில் தற்போது மழை பெய்து பெய்ததால், இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரியன்ஷா - பிரப்சிம்ரன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி ரன்கள் சேர்த்த நிலையில், மைதானத்தில் சிக்சரும் பவுண்டரியுமாக பறந்தது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில்', முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவர்களில் 122 ரன்கள் சேர்த்தனர்.
11-வது ஓவரை வீசிய டெல்லி அணியின் நடராஜன், முதல் பந்திலேயே பிரியன்ஷா விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 34 பந்துகளை சந்தித்த பிரியன்ஷா 5 பவுண்டரி 6 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த பிரப்சிம்ரன் சிங், 28 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 50 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் கணக்கை தொடங்காமலும் களத்தில் இருந்தனர்.
போட்டி நடத்த தர்மசாலா மைதானத்தில் திடீரென விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வீரர்களும் உடனடியாக மைதானத்தை விட்டு வெளிறேற்றும் பணி நடைபெற்ற வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையி்ல், தற்போ ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகள் எடுத்துள்ளது. புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னேற இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த போட்டிகளில் பஞ்சாப் 17 முறையும், டெல்லி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் இந்த சீசனில் கடைசியாக மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.