/indian-express-tamil/media/media_files/2025/04/15/3uUV82a8hzo8eM2GDaKn.jpg)
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு முல்லன்பூரில் நடைபெறும் 31-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது..
ஆங்கிலத்தில் படிக்கவும்: PBKS vs KKR LIVE Cricket Score, IPL 2025
டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா பந்து வீசியது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா, பிரபுசிம்ரன் சிங் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
பிரியன்ஷ் ஆர்யா 12 பந்துகளில் 22 ரன்கள் அடித்த நிலையில், ஹர்ஷித் ரானா பந்தில் ராமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் ராமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸ் 2 ரன் மட்டும் எடுத்து வருண் சக்ரவர்த்தி பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரபுசிம்ரன் சிங் 15 பந்துகளில் 30 ரன்கள் அடித்த நிலையில், ஹர்ஷித் ரானா பந்தில் ராமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதற்கு அடுத்து வந்த பேட்டர்கள் எல்லோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நேஹல் வதேரா 10, கிளென் மேக்ஸ்வெல் 7, சூர்யன்ஷ் ஷெட்ஜ் 4, ஷாஷாங்க் சிங் 18, மேக்ரோ ஜேன்சென் 1, சேவியர் பெர்ட்லெட் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா அணியில் ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளும் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால், அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
கொல்கத்தா அணியின் குயிண்டன் டிகாக் மற்றும் சுனில் நரைன் தொடக்க ஆட்டக்காரர்களாக் களமிறங்கினர். இதில் குயிண்டன் டிகாக் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், சேவியர் பெர்ட்லெட் பந்தில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, அஜிங்கியா ரஹனே பேட்டிங் செய்ய வந்தார். ஆனால், சுனில் நரைன் 5 ரன்கள் எடுத்த நிலையில், மேக்ரோ ஜேன்சென் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து அங்கிரிஷ் ரகுவன்ஷி பேட்டிங் செய்ய வந்தார்.
கேப்டன் அஜிங்கியா ரஹானே 17 ரன்கள் எடுத்த நிலையில், யுஸ்வேந்திர சாஹல் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார்.
அங்கிரிசஷ ரகுவன்ஷி 37 ரன்கள் எடுத்த நிலையில், யுஸ்வேந்திர சாஹல் பந்தில் சேவியரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ரின்கு சிங் வந்தார்.
வெங்கடேஷ் ஐயர் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து ஆண்ட்ரே ரஸல் வந்தார்.
ரின்கு சிங் 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில், யுஸ்வேந்திர சாஹல் பந்தில் ஜோஷ் இங்லீஸால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து, ராமன்தீப் சிங் வந்தார். அவரும், யுஸ்வேந்திர சாஹல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். ரஸல் 17 ரன்களிலும், ஹர்ஷித் ரானா 3 ரன்னில்ம் வைபவ் அரோரா 0 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்காமல் கொல்கத்தா அணி 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி தரப்பில், சாஹல் 4 விக்கெட்டுகளையும் மேக்ரோ ஜேன்சென் 3 விக்கெட்டுகளையும் சேவியர், அர்ஷ்தீப் சிங், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பஞ்சாப் அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாலும், மிகச் சிறப்பாக பந்துவீசி கொல்கத்தா அணியை 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி வெற்றி பரபரப்பு வெற்றி பெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, அன்ரிச் நார்ட்ஜே, வருண் சக்கரவர்த்தி.
பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஜோஷ் இங்கிலிஸ், ஷஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 33 போட்டிகளில், கொல்கத்தா 21 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில் பஞ்சாப் 12 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.