10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில் இன்னும் 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. இந்நிலையில் 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை (26.05.2025) மோதியது. இரு அணிகளும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இருப்பினும், புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தின் முடிவு அவசியமாகும்.
தற்போது 16 புள்ளிகளுடன் உள்ள மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தினால் 18 புள்ளியை எட்டும். குஜராத்தை (18 புள்ளிகள்) விட ரன்ரேட்டில் வலுவாக இருப்பதால் மும்பைக்கு டாப்-2 இடம் உறுதியாகி விடும். தோற்றால் 4-வது இடத்திலேயே நீடிக்கும்.
அதேவேளை 17 புள்ளிகள் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தினால் அதன் புள்ளிகள் 19-ஆக உயரும். அப்போது அந்த அணிக்கு டாப்-2 இடங்கள் உறுதியாகும். கடைசி லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோவை தோற்கடித்தாலும் பிரச்சினை இருக்காது. மாறாக பஞ்சாப் தோற்றால் 3 அல்லது 4-வது இடத்தில் இருக்கும். அதனால் இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார் அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.
அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்திருந்தபோது, மேக்ரோ ஜேன்சன் வீசிய பந்தில் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் அனார். அடுத்து, சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.
அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்பிரீத் பிரார் வீசிய பந்தில் நேஹல் வதேராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த திலக் வர்மா 1 ரன் மட்டுமே எடுத்து வைஷாக் விஜய் குமார் பந்தில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, வில் ஜேக்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
அதிரடியாக விளையாடி வில் ஜேக்ஸ் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 178 ரன்கள் எடுத்திருந்தபோது, வைஷாக் விஜய் குமார் பந்தில் மேக்ரோ ஜேன்சன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா வந்தார்.
ஹர்திக் பாண்ட்யா 15 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மேக்ரோ ஜேன்சன் பந்தில் ஜோஷ் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த நமன் திர் 12 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 20 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்தில் பிரியன்ஷ் ஆர்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்தார். 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார். மிட்செல் சாண்ட்னர் 1 ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸ், பிரியன்ஷ் ஆர்யா உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி மும்பை அணியை திணறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.
பிரியன்ஷ் ஆர்யா 62 ரன்களில் ஆட்டமிழந்தார், ஜோஷ் இங்லிஸ் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் சாண்ட்னர் வீழ்த்தினார்.
இறுதியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி அடித்து பஞ்சாப் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. ஸ்ரேயஸ் ஐயர் 26 ரன்களுடனும், வதேரா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் 19 புள்ளிகளுடன் முதல் அணியாக டாப் 2 இடத்தை உறுதி செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 4-வது இடத்தைப் பிடித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரியான் ரிக்கெல்டன், ரோகித் ஷர்மா, வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜபிரித் பும்ரா
பஞ்சாப் கிங்ஸ் அணி
பிரியன்ஷ் ஆர்யா, ஜோஸ் இங்லிஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, சஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மெக்ரோ ஜேன்சன், ஹர்பிரீத் பிரார், கைல் ஜெமிசன், வைஷாக் விஜய் குமார், அர்ஷ்தீப் சிங்