IPL 2024 | Punjab Kings | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7:30 மணிக்கு தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: PBKS vs RCB Live Score, IPL 2024
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஸ்வப்னில் சிங், கர்ன் சர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன்
பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், சாம் கரன் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், அசுதோஷ் சர்மா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வித்வத் கவேரப்பா
பெங்களூரு பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக கோலி மற்றும் டூபிளசிஸ் களமிறங்கினர். டூபிளசிஸ் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஜாக்ஸ் 12 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து கோலியுடன் ரஜத் படிதார் இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். சிக்சர் மழை பொழிந்த ரஜத் அரை சதம் அடித்தார். இருப்பினும் 55 ரன்களில் அவுட் ஆனார். இந்தநிலையில் மைதானத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் மழை நின்று ஆட்டம் தொடங்கிய நிலையில், கோலி – கிரீன் ஜோடி அபாரமாக விளையாடி ரன் சேர்த்தது. கோலி அரை சதம் விளாசினார்.
கோலி சதத்தை தவறவிட்டு 92 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 18 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய மஹிபால் டக் ஆனார். அடுத்து ஸ்வப்னில் களமிறங்கி ஒரு ரன் எடுத்த நிலையில், கடைசி பந்தில் கிரீன் அவுட் ஆனார். கிரீன் 46 ரன்கள் எடுத்திருந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் 3 விக்கெட்களையும், கவரேப்பா 2 விக்கெட்களையும், அர்ஷ்தீப் மற்றும் சாம் கரன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நடப்பு சீசனில் பஞ்சாப் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறது. அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விடும்.
இதேபோல், பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. மேலும், ,மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.
இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“