10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை 7:30 மணிக்கு சண்டிகர் மாநிலம் முல்லன்பூரில் நடைபெறும் 18-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: PBKS vs RR LIVE Cricket Score, IPL 2025
நடப்பு தொடரில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் இருக்கிறது ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப். அதே இடத்தில் தொடர்ந்து நீடிக்க அந்த அணி வரிந்து கட்டும். இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று 9-வது இடத்தில் இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜ்தான் அணியில், ஜெய்ஸ்வால் கேப்டன் சாம்சன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 10 ஓவர்களில் 89 ரன்கள் சேர்த்த நிலையில், 26 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்த சாம்சன் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரியான் பராக் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்த நிலையில், மறுமனையில் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து அடித்து ஆடிய அவர், 45 பந்துகளில், 3 பவுண்டரி 5 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய நித்தீஷ் ராணா 12 ரன்கள், ஹெட்மயர் 12 பந்துகளில்,2 பவுண்டரி 1 சிக்சருடன், 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு, 205 ரன்கள் எடுத்தது. ரியான் பராக், 25 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 43 ரன்களும், துருவ் ஜெரேல் 5 பந்துகளில் ஒரு பவுண்டரி 1 சிக்சருடன் 13 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில், பெர்கூசன் 2 விக்கெட்டுகளும், யான்சன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 206 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரர் பிரயன்ஷ் ஆர்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 5 பந்துகளில் 10 ரன்களும், மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 16 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து அதிரடி மன்னன் மார்க்கஸ் ஸ்டொயினிஸ் 7 பந்துகளுக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து வீழ்ந்தார்.
இதனையடுத்து 5-வது விக்கெட்டுக்கு இணைந்து நேஹல் வதோரா – க்ளைன் மேக்ஸ்வெல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இதில் அதிரடியாக விளையாடிய நேஹல் வதோரா அரைசதம் அடித்து அசத்திய நிலையில், மேக்ஸ்வெல் 21 பந்துகளில், 3 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்களும், நேஹல் வதோரா, 41 பந்துகளில் 4 பவுண்ரி 3 சிக்சருடன் 62 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
தொடர்ந்து களமிறங்கிய சூர்யநாஷ் ஷீட்ஜ் 2, மார்கோ ஜென்சன் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணி இந்த தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. ராஜஸ்தான் அண தரப்பில், ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், சந்தீப் சர்மா, தீக்ஷனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கார்த்திகேயா, ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 28 போட்டிகளில், பஞ்சாப் 12 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் 16 முறை வெற்றி பெற்றுள்ளது.