DC vs RR match highlights in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 37வது ஆட்டத்தில் ஐதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் களமிறங்கினர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயற்சித்த இந்த ஜோடியில், கேப்டன் கேஎல் ராகுல் 3 பவுண்டரிகளை விரட்டி 21 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவருடன் மறுமுனையில் இருந்த மயங்க் அகர்வால் ஐதராபாத்தின் ஜேசன் ஹோல்டர் வீசிய 5வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவர்களது விக்கெட்டுக்கு பின் களத்தில் இருந்த கிறிஸ் கெய்ல் – ஐடன் மார்க்ரம் ஜோடி நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. இந்த ஜோடியில் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் சிக்ஸர்களால் வானவேடிக்கை காட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கையில் 14 ரன்கள் மட்டும் எடுத்து LBW முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரன் 1 சிக்ஸரை பறக்கவிட்ட ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் பெரிதும் சோபிக்கவில்லை. எனவே அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் சேர்த்தது. ஐதரபாத் அணி தரப்பில், ஹோல்டர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 126 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஐதரபாத் அணி தொடர் விக்கெட் சரிவை சந்தித்தது. அந்த அணியின் முன்னணி வீரர்களான டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். பஞ்சாப் அணியின் பந்து வீச்சிற்கு நீண்ட நேரம் தாக்கு பிடித்த விருத்திமான் சாஹா அவசர கதியில் ரன் -அவுட் ஆனார்.
எனினும், ஐதரபாத் அணி சார்பில் களம் கண்ட ஜேசன் ஹோல்டர் அவ்வப்போது சிக்ஸர் அடித்து ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தார். இருப்பினும், கடைசி பந்து வரை ஆட்டத்தை விறுவிறுப்பாகிய அவரால் அணியை தோல்வியில் இருந்து கரை சேர்க்க முடியவில்லை. இதனால், பஞ்சாப் அணியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஐதரபாத்.
ஐதரபாத் அணிக்கு எளியமையான இலக்கை நிர்ணயித்து பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்த பஞ்சாப் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருடன் இணைத்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 2 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்த பஞ்சாப் அணி இந்த வெற்றி மூலம் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒரு வெற்றியுடன் உள்ள ஐதரபாத் அணி பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடித்து வருகிறது. மேலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் தகுதியையும் இழந்துள்ளது.
Indian Premier League, 2021Sharjah Cricket Stadium, Sharjah 05 February 2023
Sunrisers Hyderabad 120/7 (20.0)
Punjab Kings 125/7 (20.0)
Match Ended ( Day – Match 37 ) Punjab Kings beat Sunrisers Hyderabad by 5 runs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 125 ரன்கள் கொண்ட இலக்கை இறுதி வரை துரத்திய ஐதராபாத் தோல்வியை தழுவியது. 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.
That winning feeling! 👏 👏@PunjabKingsIPL hold their nerve and beat #srh by 5 runs in Sharjah. 👍 👍 #vivoipl #srhvpbksScorecard 👉 https://t.co/B6ITrxUyyF pic.twitter.com/BR2dOwDEfZ
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6வது விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கிய ரஷித் கான் அவுட் ஆனா நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு 10 பந்துகளில் 21 ரன்கள் தேவை.
1 பவுண்டரியை விரட்டி நிதானமாக விளையாடி வந்த விருத்திமான் சாஹா ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
RUN-OUT! ☝️A confusion in the middle and Saha departs for 31. @PunjabKingsIPL pick the 6th #srh wicket. 👍 👍 #vivoipl #srhvpbks Follow the match 👉 https://t.co/B6ITrxUyyF pic.twitter.com/ymD5dqe214
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள ஐதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில் 75 ரன்கள் சேர்த்துள்ள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன் சேர்க்க தடுமாறி வரும் ஐதராபாத் அணியில் 12 ரன்கள் சேர்த்த அதிரடி வீரர் கேதர் ஜாதவ் ரவி பிஷ்னோய் சுழலில் சிக்கி வெளியேறினார்.
He is on fire 🔥, is not he? Two wickets in an over for the young @bishnoi0056! 👍 👍#srh 5 down and in all sorts of trouble. #vivoipl #srhvpbks @PunjabKingsIPL Follow the match 👉 https://t.co/B6ITrxUyyF pic.twitter.com/fLr7pyMRUE
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன் சேர்க்க தொடர்ந்து தடுமாறி வரும் ஐதராபாத் அணியில் 1 பவுண்டரியை விரட்டிய மணீஷ் பாண்டே 13 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
M. O. O. D! 🙌 🙌Ravi Bishnoi strikes to dismiss Manish Pandey! #vivoipl #srhvpbks @PunjabKingsIPL Follow the match 👉 https://t.co/B6ITrxUyyF pic.twitter.com/Qgex7Mk4Fo
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
பஞ்சாப் அணிக்கு எதிராக பேட்டிங் செய்து ஐதராபாத் அணி 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் வார்னர் ஆட்டமிழந்த நிலையில் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் அவுட் ஆகி வெளியேறினார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக 126 ரன்கள் இலக்குடன் களமிறங்கியுள்ள ஐதராபாத் அணியில் தொடக்க வீரர் வார்னர் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக மார்க்ரம் 27 ரன்களும், ராகுல் 21 ரன்களும், ஹர்பிரீத் 18 ரன்களும் எடுத்தனர்.
ஐதரபாத் அணி தரப்பில், ஹோல்டர் 3 விக்கெட்டகள் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 126 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் அணி 3 விக்கெட்டை இழந்ததுள்ள நிலையில், ஐதராபாத்தின் சந்தீப் சர்மா வீசிய பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட நிக்கோலஸ் பூரன் அதே ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் அணி 2 விக்கெட்டை இழந்ததுள்ள நிலையில், அந்த அணியின் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் LBW முறையில் அவுட்டானார்
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி போராடித் தோற்றது. 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் அணி, 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து உள்ள நிலையில் அந்த அணியின் கிறிஸ் கெய்ல் – ஐடன் மார்க்ரம் ஜோடி நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ளது. இதுவரை தலா 1 பவுண்டரிகளை இந்த ஜோடி ஓடவிட்டுள்ளது.
10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 55 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ளது. 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி 29 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீசி வருகிறது. ஐதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் வீசிய 5வது ஓவரில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி ஆட்டமிழந்து வெளியேறியது.
.@Jaseholder98 – standing tall & delivering the goods! 👍 👍Two wickets in quick succession for the @SunRisers all-rounder. 👌 👌#pbks lose KL Rahul and Mayank Agarwal. #vivoipl #srhvpbksFollow the match 👉 https://t.co/B6ITrxUyyF pic.twitter.com/z6XqbfDiGE
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீசி வரும் நிலையில், தொடக்க வீரர் கேஎல் ராகுல் 3 பவுண்டரிகளை விரட்டி 21 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் களமிறங்கியுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ்: கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: டேவிட் வார்னர், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது
Team News@SunRisers remain unchanged. @PunjabKingsIPL make 3 changes as Nathan Ellis, Chris Gayle and Ravi Bishnoi named in the team. #vivoipl #srhvpbksFollow the match 👉 https://t.co/B6ITrxUyyFHere are the Playing XIs 🔽 pic.twitter.com/owAlry0KxI
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
Toss Update from Sharjah! @SunRisers have elected to bowl against @PunjabKingsIPL. #vivoipl #srhvpbksFollow the match 👉 https://t.co/B6ITrxUyyF pic.twitter.com/Wt5B3W5yoF
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
தனது 150 வது ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள டேவிட் வார்னர், பஞ்சாப் அணிக்கு எதிராக 52.39 சராசரியிலும், 140.12 ஸ்ட்ரைக் ரேட்டிலும் உள்ளார். மேலும் அவர் அந்த அணிக்கு எதிரான 20 இன்னிங்ஸ்களில் 943 ரன்கள் குவித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிராக களமாட உள்ள பஞ்சாப் அணியின் 200-வது ஐ.பி.எல். ஆட்டம் இது என்பது சிறப்பு அம்சமாகும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: டேவிட் வார்னர், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது.
பஞ்சாப் கிங்ஸ்: கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், கிறிஸ் ஜோர்டான், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ரவி பிஷ்னோய்.
🦁s off to Sharjah! 🏟#saddapunjab #ipl2021 #punjabkings #srhvpbks @nicholas_47 pic.twitter.com/slmjxURLb7
— Punjab Kings (@PunjabKingsIPL) September 25, 2021
சன்ரைசர்ஸ் அணி மொத்தம் 17 முறை பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டுள்ளது. இதில் அந்த அணி 12 முறை வென்றுள்ளது. பஞ்சாப் அணி 5 ஆட்டத்தில் வென்றுள்ளது.
Here's our H2H record against Punjab Kings so far in the #ipl#srhvpbks #orangearmy #orangeornothing #ipl2021 pic.twitter.com/CcdLDQlAsM
— SunRisers Hyderabad (@SunRisers) September 25, 2021
சன்ரைசர்ஸ் அணி மொத்தம் 17 முறை பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டுள்ளது. இதில் அந்த அணி 12 முறை வென்றுள்ளது. பஞ்சாப் அணி 5 ஆட்டத்தில் வென்றுள்ளது.
Here's our H2H record against Punjab Kings so far in the #ipl#srhvpbks #orangearmy #orangeornothing #ipl2021 pic.twitter.com/CcdLDQlAsM
— SunRisers Hyderabad (@SunRisers) September 25, 2021
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஐதராபாத் – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இது முக்கிய போட்டி என்பதால் சுவாரஷ்யங்கள் அதிகம் இருக்கும் என நம்பலாம்.