11-வது புரோ கபடி (பி.கே.எல் 2024) தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மற்றும் நேற்று வெள்ளிக்கிழமை (ஆக.16,17) மும்பையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற நிலையில், ஏலத்தில் களமாடிய 12 அணிகள் ரூ.33.7 கோடியை செலவு செய்து 118 வீரர்களை வாங்கினர்.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 2.15 கோடிக்கு தமிழ் தலைவாஸ் அணி முன்னணி வீரர் சச்சின் தன்வாரை வாங்கியது. அடுத்ததாக ஈரான் வீரர் முகமதுரேசா ஷட்லூயி சியானேனை 2.07 கோடிக்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வாங்கியது. மேலும், 6 வீரர்கள் தலா ரூ. 1 கோடிக்கு வாங்கப்பட்டனர். மொத்தமாக 8 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்டனர்.
முதல் நாள் ஏலத்தில் 20 வீரர்கள் வாங்கப்பட்டனர். மேலும் மூன்று இறுதி ஏலப் போட்டி (FBM) கார்டை மூலம் பெங்கால் வாரியர்ஸ், தெலுங்கு டைட்டஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பயன்படுத்தின. இந்த அணிகள் முறையே மனிந்தர் சிங், பவன் செஹ்ராவத் மற்றும் சோம்பிர் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டன.
இந்த வீரர்கள் ஏலத்தில் பிகேஎல் வரலாற்றில் ரூ.1 கோடி கிளப்பில் வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். சச்சின் தன்வார், முகமதுரேசா ஷட்லூயி சியானே, குமன் சிங், பவன் செஹ்ராவத், பாரத், மனிந்தர் சிங், அஜிங்க்யா பவார் மற்றும் சுனில் குமார் ஆகியோர் இரண்டாம் நாள் வீரர்கள் ஏலத்தில் 1 கோடி கிளப்பில் இடம்பிடித்துள்ளனர். சுனில் குமார் யு மும்பா அணியால் 1.015 கோடிக்கு வசப்படுத்தப்பட்ட நிலையில், அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய டிஃபண்டர் ஆனார்.
பிகேஎல் வரலாற்றில் அதிக ரெய்டு புள்ளிகள் பெற்ற வீரர் பர்தீப் நர்வால் பெங்களூரு புல்ஸ் அணியால் ரூ.70 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். மூத்த டிஃபென்டர் சுர்ஜித் சிங்கை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ரூ.60 லட்சத்திற்கு வாங்கியது. அஜீத் வி குமார் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் சி பிரிவில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் ஆனார். அவர் புனேரி பல்டானால் ரூ.66 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.
இதற்கிடையில், ஜெய் பகவானை பெங்களூரு புல்ஸ் அணி 63 லட்சத்துக்கு வாங்கியது. அர்ஜுன் ரதியை பெங்கால் வாரியர்ஸ் ரூ.41 லட்சத்துக்கு வாங்கியது. டி பிரிவில் மிகவும் விலை உயர்ந்த வீரர் ஆனார். புனேரி பல்டன் அணியில் அமான் ரூ.16.2 லட்சத்துக்கும், ஸ்டுவர்ட் சிங்கு 14.2 லட்சத்துக்கும் யு மும்பாவால் வாங்கப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“