Advertisment

Tamil Thalaivas Today's Match: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா; யார் பலம் எப்படி?

PKL 2022: இன்றைய 16-வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணிகள் பெங்களூருவில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

author-image
WebDesk
New Update
PKL 2022: Tamil Thalaivas vs U Mumba, Probable Playing 7, strength in tamil

PKL Match 16: Pro Kabaddi 2022, Tamil Thalaivas vs U Mumba, Match Details, Squad, Probable Playing 7 Tamil News

Pro Kabaddi League Season 9: Tamil Thalaivas vs  U Mumba Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய 16-வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணிகள் பெங்களூருவில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisment

தமிழ் தலைவாஸ் vs யு மும்பா; யார் பலம் எப்படி?

கடந்த திங்கள் கிழமை யு பி யோதாஸ் அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் யு மும்பா அணி அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. தொடக்க ஆட்டத்தில் தோல்வி கண்ட அந்த அணி யு பி யோதாஸ் அணியை 30-23 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. கேப்டன் சுரிந்தர் சிங், டிஃபண்டர் ரிங்கு, கிரண் மகர் மற்றும் ஹரேந்திர குமார் ஆகியோர் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரெய்டிங்கில் ஜெய் பகவான் மற்றும் குமன் சிங் ஆகியோர் முறையே 6 மற்றும் 5 புள்ளிகளைப் பெற்று நல்ல ஃபார்மில் உள்ளனர்.

மறுபுறம், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் தொடக்க ஆட்டத்தில் மோதிய தமிழ் தலைவாஸ் அணி 31 - 31 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான பவன் செஹ்ராவத் ஆட்டத்தின் முதல் 10 வது நிமிடத்திலே காயாமடைந்து வெளியேறினார். எனினும், அந்த அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியைச் சமன் செய்தார்கள்.

தொடர்ந்து ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக நடந்த 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 22-27 என்ற புள்ளிக் கணக்கில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் ரெய்டர் நரேந்தர் 3 புள்ளிகளை மட்டுமே எடுத்தார். அணியில் இரண்டாம் நிலை ரைடர் இல்லாததால் டிஃபெண்டர்களான ஹிமான்ஷு மற்றும் ஆல்-ரவுண்டர் விஸ்வநாத் ஆகியோர் ரைடர்களாகப் பயன்படுத்தப்பட்டனர். அவர்களால் தலா இரண்டு புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. தற்போதைய கேப்டனாக இருக்கும் சாகர் ரதி இந்த ஆட்டத்தில் ஹை - 5 பாயிண்டுகளை எடுத்து அசத்தி இருந்தார். அவருக்கு உறுதுணையாக சாஹில் குலியா, மோஹித் மற்றும் அப்ஷேக் போன்ற வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

ரைடிங் பிரிவில் மட்டும் சொதப்பி வரும் தமிழ் தலைவாஸ் அணி, அதில் கூடுதல் கவனம் செலுத்தினால் அந்த அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து விடலாம். ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போட்டு தொடர் வெற்றியை ருசிக்கவே யு மும்பா அணி முயலும். ஏற்கனவே வெற்றி கணக்கை தொடங்கியுள்ள யு மும்பா அணி அதே உத்வேகத்தில் களமாடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

புரோ கபடி 2022: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா - இரு அணி வீரர்கள் பட்டியல்

தமிழ் தலைவாஸ்

ரைடர்ஸ்:

பவன் குமார் (செஹ்ராவத்), அஜிங்க்யா அசோக் பவார், ஜதின், ஹிமான்ஷு, ஹிமான்ஷு, நரேந்தர்

டிஃபெண்டர்கள்:

சாகர், அங்கித், எம். அபிஷேக், ஆஷிஷ், எம்.டி. ஆரிப் ரப்பானி, ஹிமான்ஷு, மோஹித், சாஹில், அர்பித் சரோஹா

ஆல்-ரவுண்டர்கள்:

விஸ்வநாத் வி., தனுஷன் லக்ஷ்மமோஹா, கே.அபிமன்யு

யு மும்பா

ரைடர்ஸ்:

ஆஷிஷ், குமன் சிங், ஜெய் பகவான், ஹெய்டராலி எக்ராமி, அங்குஷ், கமலேஷ், சிவம், பிரனய் வினய் ரானே, சச்சின், ரூபேஷ்

டிஃபெண்டர்கள்:

சுரிந்தர் சிங், ரின்கு, ஷிவான்ஷ் தாக்கூர், ராகுல், பிரின்ஸ், கிரண் லக்ஷ்மன் மகார், ஹரேந்திர குமார், சத்யவான், மோஹித்

ஆல்-ரவுண்டர்:

கோலமபாஸ் கொரூக்கி

தமிழ் தலைவாஸ் vs யு மும்பா - உத்தேச ஆடும் செவன்

பவன் செராவத் காயம்:

தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான பவன் செராவத் முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் அவர் இன்றை ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை.

தமிழ் தலைவாஸ்:

ஆஷிஷ், அஜிங்க்யா பவார், விஸ்வநாத் வி, சாகர், ஹிமான்ஷு, மோஹித் மற்றும் எம் அபிஷேக்

யு மும்பா

குமன் சிங், சுரிந்தர் சிங் (கேப்டன்), ஹரேந்திர குமார், ஆஷிஷ், சிவம் அல்லது ஜெய் பகவான், ரிங்கு, மோஹித்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Tamil Sports Update Pro Kabaddi Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment