Advertisment

அத்தனையும் தோல்வி... பவன் ஷெராவத் டீமுக்கு இந்த நிலையா?

புரோ கபடியில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் எந்தப் போட்டியிலும் வெற்றி பெறாத நட்சத்திர வீரர் பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

author-image
WebDesk
New Update
PKL 2023 Points Table Standings and Rankings of All Teams of Pro Kabaddi League in tamil

தலா 3 போட்டிகளில் விளையாடிய 2 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ள பாட்னா பைரேட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் 6வது மற்றும் 7வது இடத்திலும் உள்ளன.

 Pro-kabaddi-league 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) போட்டி ஏதும் இல்லை. இதனால், அனைத்து அணி வீரர்களும் ஓய்வு எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், நடப்பு புரோ கபடி தொடருக்கான புள்ளிகள் அட்டவணையை எப்படி உள்ளது என்றும், எந்த அணி முன்னிலையில் உள்ளது என்றும் இங்கு பார்க்கலாம். 

நடப்பு புரோ கபடி தொடரில் இதுவரை நடந்த 4 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்கால் வாரியர்ஸ் அணி 3 வெற்றி, 1 டை என 18 புள்ளிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் முதல் இடத்தில் உள்ளது. 

5ல் 3 வெற்றி, 2 தோல்வி என 17 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் 2வது இடத்திலும், 6ல் 2 வெற்றி, 4 தோல்வி என 14  புள்ளிகளுடன் பெங்களூரு புல்ஸ் 3வது இடத்திலும், 4ல் 2 வெற்றி, 2 தோல்வி என 12  புள்ளிகளுடன் உ.பி. யோத்தாஸ் 4வது இடத்திலும் உள்ளன. 

விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள புனேரி பால்டன் 10 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளது. தலா 3 போட்டிகளில் விளையாடிய 2 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ள பாட்னா பைரேட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் 6வது மற்றும் 7வது இடத்திலும் உள்ளன.  

4ல் ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு டை என 10 புள்ளிகளுடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 8வது இடத்திலும், 3ல் 2 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் அரியானா ஸ்டீலர்ஸ் 9வது இடத்திலும் உள்ளன. 

தலா 3 போட்டிகளில் விளையாடி 1ல் வெற்றி, 2ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் தபாங் டெல்லி மற்றும் யு மும்பா அணிகள் 10 மற்றும் 11வது இடத்தில் உள்ளனர். இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் எந்தப் போட்டியிலும் வெற்றி பெறாத நட்சத்திர வீரர் பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment