Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
புள்ளிப் பட்டியல் நிலவரம்
இந்நிலையில், இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். நடப்பு சீசனில் இதுவரை 55 போட்டிகள் முடிந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, 41 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் புனேரி பல்தான் அணி முதல் இடத்தில் உள்ளது. 34 புள்ளிகளுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் 2வது இடத்திலும், 33 புள்ளிகளுடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 3வது இடத்திலும், 30 புள்ளிகளுடன் தபாங் டெல்லி 4வது இடத்திலும் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் 13 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆறுதல் அளிக்கும் விஷயமாக தமிழ் தலைவாஸ் அணியின் முன்னாள் கேப்டன் பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் பட்டியலின் கடைசி இடமான 12வது இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று 13புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. மறுபுறம், தெலுங்கு டைட்டன்ஸ் அணி அதை விட மோசமாக செயல்பட்டு 9 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டும் பெற்று 8 புள்ளிகளுடன் 12வது இடத்தில் உள்ளது.
புரோ கபடி லீக் 2023 - 2024: புள்ளிப் பட்டியல்
1. புனேரி பல்தான் - 9 போட்டிகள், 8 வெற்றி, 41 புள்ளிகள்
2. குஜராத் ஜெயண்ட்ஸ் - 10 போட்டிகள், 6 வெற்றி, 34 புள்ளிகள்
3. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - 9 போட்டிகள், 5 வெற்றி, 33 புள்ளிகள்
4. டபாங் டெல்லி - 9 போட்டிகள், 5 வெற்றி, 30 புள்ளிகள்
5. பாட்னா பைரேட்ஸ் - 9 போட்டிகள், 5 வெற்றி, 27 புள்ளிகள்
6. யு மும்பா - 7 போட்டிகள், 5 வெற்றி, 26 புள்ளிகள்
7. ஹரியானா ஸ்டீலர்ஸ் - 9 போட்டிகள், 5 வெற்றி, 26 புள்ளிகள்
8. பெங்களூரு புல்ஸ் - 10 போட்டிகள், 4 வெற்றி, 25 புள்ளிகள்
9. பெங்கால் வாரியர்ஸ் - 9 போட்டிகள், 3 வெற்றி, 22 புள்ளிகள்
10. யுபி யோதாஸ் - 11 போட்டிகள், 3 வெற்றி, 21 புள்ளிகள்
11. தமிழ் தலைவாஸ் - 9 போட்டிகள், 2 வெற்றி, 13 புள்ளிகள்
12. தெலுங்கு டைட்டன்ஸ் - 9 போட்டிகள், 1 வெற்றி, 8 புள்ளிகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“