11-வது புரோ கபடி (பி.கே.எல் 2024) தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று வியாழன் மற்றும் இன்று வெள்ளிக்கிழமை மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், மொத்தமாக இதுவரை 88 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 212 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
'ஏ' பிரிவு வீரா்களுக்கு ரூ.30 லட்சம், 'பி' பிரிவு வீரா்களுக்கு ரூ. 20 லட்சம், 'சி' பிரிவு வீரா்களுக்கு ரூ.13 லட்சம், 'டி' பிரிவு வீரா்களுக்கு ரூ.9 லட்சம் அடிப்படை ஏல விலையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை நடந்த முதல் நாள் ஏலத்தில் 8 வீரர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்டனர். இதில், அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரா்களாக சச்சின் தன்வா் ரூ.2.15 கோடி (தமிழ் தலைவாஸ்), முகமது ரேஸா ரூ.2.07 கோடி (ஹரியானா ஸ்டீலா்ஸ்) போன்ற வீரர்கள் உள்ளனர்.
குறிப்பாக, 'ஏ' பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி சாா்பில் சச்சின் தன்வா் ரூ.2.15 கோடிக்கு வாங்கப்பட்டாா். ஆல்ரவுண்டா் வீரரான ஈரானின் முகமதுரே ஸாஷட்லோய் ரூ.2.07 கோடிக்கு ஹரியானா ஸ்டீலா்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். கடந்த சீசனி ல் ரூ.2.6 கோடிக்கு வாங்கப்பட்ட பவன் ஷெராவத் இந்த முறை தெலுங்கு டைட்ன்ஸ் அணியால் ரூ.1.72 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார்.
ரைடர் குமன் சிங் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ.1.97 கோடிக்கு வாங்கப்பட்டார். இதேபோல் ரைடர் பாரத் யு.பி யோதாஸ் அணியால் ரூ 1.30 கோடிக்கு வாங்கப்பட்டார்.
யு மும்பா தரப்பில் ரைடா் சுனில் குமாா் ரூ.1.01 கோடிக்கும், பெ ங்கால் வாரியா்ஸ் தரப்பில் ரைடா் மனிந்தர் சிங் ரூ.1.15 கோடிக்கும், 'பி' பிரிவில் பெங்களூரு புல்ஸ் தரப்பில் ரைடா் அஜிங்க்யா பவார் ரூ.1.107 கோடிக்கும் வாங்கப்பட்டனா். அஜிங்க்யா பவார் முன்னதாக தமிழ் தலைவாஸ் அணியில் முன்னணி வீரராக ஆடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“