Top raiders, defenders and most super raids, and super tackles from PKL 2022 Season 9 in tamil: இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் இன்று இரவு 8:00 அணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக் ரசிகர்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
நடப்பு சீசனில் புதிய வீரர்கள் அர்ஜுன் தேஷ்வால் மற்றும் பரத் ஆகியோர் சிறந்த ரைடர் மற்றும் சிறந்த டிஃபென்டர் தரவரிசையில் முன்னணியில் உள்ளனர். அதே நேரத்தில் அங்குஷ் மற்றும் முகமதுரேசா சியானே ஆகியோருக்கு இடையே டிஃபென்ஸ் இடத்திற்காக போட்டி நிலவுகிறது.

23 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஷ்வால் 290 ரெய்டு புள்ளிகளுடன் முதல் முறையாக டாப் ரைடராக இருந்து வருகிறார். அவருக்கு இன்னும் ஒரு போட்டி உள்ள நிலையில், அவரே டாப் 1 ரெய்டராக சீசனை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அவரது சக வீரர் அங்குஷ் இந்த சீசனின் சிறந்த டிஃபண்டராக செயல்பட்டுள்ளார். 23 போட்டிகளில் களமாடியுள்ள அவர் 86 டிஃபண்ஸ் புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பிகேஎல் சீசன் 8ல் 24 போட்டிகளில் 304 ரெய்டு புள்ளிகளைப் பதிவு செய்த பவன் செஹ்ராவத்துக்குப் பின்னால் தேஷ்வால் கடந்த சீசனில் 22 போட்டிகளில் 267 ரெய்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவர் 17 முறை சூப்பர் 10ஐப் பதிவுசெய்தார். மற்றும் டூ ஆர் டை ரெயிடில் 37 புள்ளிகளைப் பெற்று அசத்தினார். தேஷ்வால் மற்றும் பாரத் தவிர, டாப் 10 ரெயிடர்கள் பட்டியலில் நவீன் குமார், பர்தீப் நர்வால், மனிந்தர் சிங் மற்றும் சச்சின் தன்வார் போன்ற பிரபல வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அந்த இடத்துக்கு சவாலாக இருந்த பவன் செராவத், காயம் காரணமாக சீசனைத் தவறவிட்டார்.
டிஃபண்டர்களில் அங்குஷ், தனது முதல் சீசனிலே டாப் 10 இடத்திற்கு நுழைந்துள்ளார். ரைட் கார்னரில் ஆடும் அவர் 9 முறை ஹைஃபைவ் புள்ளிகளை எடுத்துள்ளார். மேலும் அவர் கடந்த சீசனின் சிறந்த டிஃபண்டர் முகமதுரேசா சியானே மற்றும் சவுரப் நந்தால், சாஹுல் குலியா, சுனில் குமார் மற்றும் சுமித் போன்றோருடன் இணைந்துள்ளார்.
சுவாரஸ்யமாக, இறுதிப் போட்டியில் களமாடும் புனேரி பல்டான் அணியின் ஒரு வீரர்கள் இந்த இரு பட்டியலிலும் இடம்பெறவில்லை. ஆனால் இறுதிப் போட்டியின் முடிவில் பிகேஎல்லின் சிறந்த டிஃபென்டரான ஃபாஸல் அட்ராச்சலி டாப் 10 தரவரிசைகளுக்குள் நுழைவதற்கு வாய்ப்புள்ளது.
தமிழ் தலைவாஸ் வீரர்களைப் பொறுத்தவரை, டாப் 10 ரெயிடகர்கள் பட்டியலில் 4வது இடத்தில் நரேந்தர் ஹோஷியாரும், டாப் 10 டிஃபண்டர்கள் பட்டியலில் 8 வது இடத்தில் சாஹில் குலியா-வும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 10 ரெய்டர்கள் பட்டியல்:
ரேங்கிங் – பிளேயர் – அணி – ரெய்டு புள்ளிகள் – போட்டிகள்
1 – அர்ஜுன் தேஷ்வால் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – 290 – 23
2 – பாரத் – பெங்களூரு புல்ஸ் – 279 – 23
3 – நவீன் குமார் – தபாங் டெல்லி
4 – நரேந்தர் ஹோஷியார் – தமிழ் தலைவாஸ் – 243 – 23
5 – மனிந்தர் சிங் – பெங்கால் வாரியர்ஸ் – 238 – 21
6 பர்தீப் நர்வால் உ.பி. யோத்தாஸ் – 220 – 22
7 – பார்தீக் தஹியா – குஜராத்
8 – சச்சின் தன்வார் – பாட்னா பைரேட்ஸ் – 176 – 20
9 – மன்ஜீத் ஹரியானா
10 – ரோஹித் குலியா – பாட்னா பைரேட்ஸ் – 148 – 19
டாப் 10 டிஃபண்டர்கள் பட்டியல்:
ரேங்கிங் – பிளேயர் – அணி – டேக்கிள் புள்ளிகள் – போட்டிகள்
1 – அங்குஷ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – 86 – 23
2 – முகமதுரேசா சியானே – பாட்னா பைரேட்ஸ் – 84 – 20
3 – சௌரப் நந்தல் – பெங்களூரு புல்ஸ் – 72 – 24
4 – அமன் – பெங்களூரு புல்ஸ் – 60 – 24
5 – ரிங்கு – யு மும்பை – 59 – 19
6 – சுனில் – குமார் ஜெய்ப்பூர் – பிங்க் பாந்தர்ஸ் – 59 – 22
7 – விஷால் – தபாங் – டெல்லி – 58 – 22
8 – சாஹில் குலியா – தமிழ் தலைவாஸ் – 57 – 23
9 – சுமித் – யுபி யோதாஸ் – 54 – 21
10 – ஜெய்தீப் தஹியா – ஹரியானா ஸ்டீலர்ஸ் – 54 – 21
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil