Advertisment

22 பி.கே.எல் போட்டி, 130 ரைடிங் புள்ளி... கம் பேக் கொடுக்கும் அஜிங்க்யா பவார்!

தமிழ் தலைவாஸ் அணியின் அதிரடி ரைடிங் வீரரான அஜிங்க்யா பவார் பி.கே.எல் தொடரின் 10வது சீசனில் அதிரடி கம்பேக் கொடுக்க உள்ளார்.

author-image
WebDesk
Sep 06, 2023 14:23 IST
 Ajinkya Pawar  | Tamil Thalaivas

பி.கே.எல் தொடரின் 9வது சீசனில் 22 போட்டிகளில் 130 ரைடிங் புள்ளிகளை குவித்து அசத்தி இருந்தார்.

Sports - Pro Kabaddi League Season 10 - Tamil Thalaivas Tamil News: 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வருகிற செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில் பல திறமையான வீரர்களும், பல புதிய வீரர்களும் பதிவு செய்ய உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த சீசனுக்கு முன்னதாக ஒப்பந்தத்தை இழந்த வீரர்களும் ஏலத்தில் இடம்பெறுவார்கள்.

Advertisment

முன்னதாக, பி.கே.எல் தொடரில் களமாடும் 12 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில், தமிழ் தலைவாஸ் அணி தக்க வைக்கப்பட்ட எலைட் வீரர்கள் பிரிவில் அஜிங்க்யா பவார், அசோக் ஆகிய வீரர்களையும், தக்க வைக்கப்பட்ட இளம் வீரர்கள் பிரிவில் எம் அபிஷேக், சாஹில், மோஹித், ஆஷிஷ் போன்ற வீரர்களையும், தக்க வைக்கப்பட்ட புதிய இளம் வீரர்கள் பிரிவில் நரேந்தர், ஹிமான்ஷு, ஜதின் ஆகிய வீரர்களையும் தக்க வைத்துக்கொண்டது 

கம்பேக் கொடுக்கும்  அஜிங்க்யா பவார் 

இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் அதிரடி ரைடிங் வீரரான அஜிங்க்யா பவார் பி.கே.எல் தொடரின் 10வது சீசனில் அதிரடி கம்பேக் கொடுக்க உள்ளார். கடந்த சீசனில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்  தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதி வரை முன்னேற உதவி இருந்தார். அவர் 22 போட்டிகளில் 130 ரைடிங் புள்ளிகளை குவித்து அசத்தி இருந்தார். அவர் எதிர்வரும் சீசனிலும் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

#Sports #Pro Kabaddi League #Tamil Thalaivas #Pro Kabaddi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment