scorecardresearch

சென்னை டெஸ்ட்: இந்திய அணியில் களமிறங்கும் வீரர்கள் யார், யார்?

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட உள்ள 11 பேரை கொண்ட பட்டியலை கணித்து, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

playing XI for Team India's first Test vs England -சென்னை டெஸ்ட்: இந்திய அணியில் களமிறங்கும் வீரர்கள் யார், யார்?

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகளும், 5 டி-20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் கொண்ட தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் முதல் டெஸ்ட் வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதில்லை எனவும், பிப்ரவரி 13-ம் தேதி நடக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கு 50% பார்வையாளர்களை அனுமதிக்கலாம் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்னும் கொரோனா அச்சம் நீடித்து வருவதால் இரு அணி கிரிக்கெட் வீரர்களும் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிமைப்படுத்தபட்ட போது கோவிட் -19 க்கான மூன்று ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் எடுக்கப்பட்டன. அதில் இரு அணி வீரர்களுக்கும் கொரோனா தொற்று (நெகடிவ்) இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் 6 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் இரு அணி வீரர்களும் இன்று முதல் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்திய அணி வீரர்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், இங்கிலாந்து அணி வீரர்கள் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பயிற்சியில் ஈடுபட உள்ளாதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து அணி கடந்த மாதம் இலங்கை அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் இந்தியா வந்துள்ளது. அந்த அணியில் உள்ள வீரர்களை சுழல் முறையில் விளையாட வைக்கும் புதிய உத்தியையும் கையாண்டு வருகின்றது. அதனால் தான் ஸ்டார் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற வீரர்கள் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடவில்லை. அதோடு அந்த அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்டலர் இந்திய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட உள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை, கடந்த மாதம் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றிய குஷியில் உள்ளது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை இரு அணிகளும் இதுவரை வெளியிடவில்லை. இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட உள்ள 11 பேரை கொண்ட பட்டியலை கணித்து, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய மண்ணில் அதிகம் விளையாடிய வீரர் என்பதாலும் அனுபவமிக்க வீரராக உள்ளதாலும் ரோகித் சர்மாவையும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்த சுப்மன் கில்லையும் தொடக்க ஆட்டக் காரர்களாக தேர்வு செய்துள்ளார். மிடில் – ஆடரில் வழக்கம் போல புஜாரா, விராட் கோலி மற்றும் ரஹானேவை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ள நிலையில் விருத்திமான் சஹாவிற்கு பதிலாக ரிஷாப் பந்தை தெரிவு செய்திருக்கிறார்.

வேகப் பந்து வீச்சளர்களில் பும்ரா, இஷாந்த் சர்மா-முகமது சிராஜ் மற்றும் ஷார்துல் தாகூர்-குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடையில் மாற்றம் இருக்கலாம் என்றும் கருதுகிறார்.

சுழலுக்கு, இடது கை சுழல் பந்து வீச்சாளரான அக்சர் படேலையும் அஸ்வினையும் தெரிவு செய்துள்ளார். இடது கை சுழல் பந்து வீச்சு இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அக்சர் படேலை தெரிவு செய்ததாக பதிவிட்டு உள்ளார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Playing xi for team indias first test vs england

Best of Express