அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது.
தாயகம் திரும்பிய இந்தியா - மோடியுடன் சந்திப்பு
இந்திய அணியின் இந்த வெற்றி மூலம், 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தாலும், பார்படாஸில் பெரில் புயல் காரணமாக இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று புயல் ஜமைக்காவை நோக்கி நகர்ந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று புதன்கிழமை இந்தியா புறப்பட்டனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: PM Modi asks Rohit Sharma – What does mud taste like?; Virat Kohli, Suryakumar Yadav, others also relive winning moments
இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் அனைவரும் இன்று காலை தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையத்தில் திரளாக குவிந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
கேள்வி
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றிக்குப் பிறகு, மைதானத்தில் அப்படியே முகங்குப்புற விழுந்த கேப்டன் ரோகித் தனது வலது கையால் தரையை ஓங்கி தட்டினார். அதன்பிறகு, மைதானத்தில் இருந்த புல்லை வாயில் போட்டு மென்றார். இந்த சம்பவத்தை இந்திய அணி வீரர்களுடனான சந்திப்பின் போது நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அந்த மண்ணின் சுவை எப்படி இருந்தது என்று கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்டார்.
இதன்பிறகு, இறுதிப் போட்டியில் 59 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி 76 ரன்கள் எடுத்த நட்சத்திர வீரர் கோலியிடம், இந்தப் போட்டியைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிய பிரதமர்மோடி விரும்பினார். இதேபோல், இறுதிப் போட்டியில் சிக்கலில் சிக்கிய அணியை மீட்க முன்கூட்டியே பேட்டிங் செய்ய வந்தது பற்றி அக்ஸர் படேல் எப்படி உணர்ந்தார் என்பது குறித்து அவரிடம் கேட்டார்.
இந்த இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு பல பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோது, தனது தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தலாக விக்கெட் வீழ்த்தினார் பும்ரா. அவரிடம் பிரதமர் மோடி, அந்த இக்கட்டான நேரத்தில் அவரது மனதில் என்ன ஓடியது? என்று கேட்டார். இந்த ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஹர்திக் பாண்டியாவிடம் அவரது ஆல்ரவுண்டர் திறன் பற்றியும், கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட சூழலில், அந்த ஓவரை வீச ஹர்திக் எப்படி திட்டமிட்டார் என்றும் கேட்டார்.
ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஐ.சி.சி கோப்பையை இந்தியா வென்ற நிலையில், அணியின் வெற்றிக்கு உதவிய டேவிட் மில்லர் கேட்ச்சை பவுண்டரி கோட்டில் இருந்து அபாரமாக தாவிப் பிடித்தது பற்றியும், அந்த மாயாஜால ஏழு வினாடிகள் குறித்தும் சூர்யகுமார் யாதவிடம் கேட்டார் பிரதமர் மோடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.