'அவருக்கு ஃபிரான்சை விட இந்தியாவில் தான் மவுசு அதிகம்': பிரபல கால்பந்து வீரரை புகழ்ந்து தள்ளிய மோடி
இந்திய ரசிகர்களிடையே பிரெஞ்சு தேசிய கால்பந்து அணியின் கேப்டனான கைலியன் எம்பாப்பேவின் பிரபலமடைந்து வருவதை தனது உரையின் போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
கத்தாரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவிற்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தி இருந்தார் எம்பாப்பே.
Kylian Mbappé Prime Minister NarendraModi Tamil News: ஃபிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். பின்னர், அங்கு வசித்து வரும் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார். தனது உரையின் போது பிரதமர் மோடி, இந்தியாவில் சர்வதேச வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பேசினார். மேலும், இந்திய ரசிகர்களிடையே பிரெஞ்சு தேசிய கால்பந்து அணியின் கேப்டனான கைலியன் எம்பாப்பேவின் பிரபலமடைந்து வருவதை குறிப்பிட்டார்.
Advertisment
எம்பாப்வே குறித்து பிரதமர் மோடி கூறுகையில் ''இந்திய இளைஞர்களிடையே எம்பாப்பே சூப்பர் ஹீரோவா திகழ்கிறார். எம்பாப்பே-ஐ அனேகமாக பிரான்சை விட இந்திய மக்கள் அதிகமானோருக்கு தெரிந்திருக்கலாம்'' என்றார்.
கைலியன் எம்பாப்பே
கைலியன் எம்பாப்பே பிரெஞ்ச் லீக் மற்றும் சர்வதேச போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார். கத்தாரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவிற்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisement
சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டுக்கு இடையே கிரிக்கெட்டும் வளர்ந்து வருகிறது என்பதை குறிப்பிட்டு இருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து. செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil