உலக கோப்பை டி20யில் தோனியை விளையாடுமாறு மோடி கேட்டுக்கொள்ள வேண்டும் - சோயப் அக்தர்!

ராஞ்சியில் இருந்து வந்து இந்தியாவையே உலுக்கியுள்ளார். இந்தியா அவரை என்றுமே மறக்காது என பெருமிதம்

ராஞ்சியில் இருந்து வந்து இந்தியாவையே உலுக்கியுள்ளார். இந்தியா அவரை என்றுமே மறக்காது என பெருமிதம்

author-image
WebDesk
New Update
உலக கோப்பை டி20யில் தோனியை விளையாடுமாறு மோடி கேட்டுக்கொள்ள வேண்டும் - சோயப் அக்தர்!

PM Modi may request MS Dhoni to play world T20 in 2021 says Shoaib Akthar: சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக எம்.எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தனர். அனைவராலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு கிரிக்கெட் வீரராகவே வலம் வந்தார் தோனி. நடுத்தர குடும்பத்தில் இருந்து அவர் அடைந்திருக்கும் உயரம் பல்வேறு நபர்களுக்கு இன்ஸ்பிரேசனாக இருந்திருக்கிறார். அவரின் ஓய்வு அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

Advertisment

மேலும் படிக்க : ‘ஏய் கோலி! சொன்னதை மட்டும் செய்’ – களத்தில் தோனியின் ஆக்ரோஷ பன்ச் வீடியோஸ்

இந்நிலையில் போல்வாசிம் என்ற யுடியூப் சேனலில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர், தோனி டி20 உலக கோப்பையில் விளையாடிய பிறகு ஓய்வினை அறிவித்திருக்கலாம் என்று கூறினார். தோனியின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, நேயம், கொடுத்திருக்கும் அங்கீகாரம் எல்லாம் பிரமிப்பிற்குரியவை. அவரை டி20 உலக கோப்பையில் விளையாட வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ராஞ்சியில் இருந்து வந்து இந்தியாவையே உலுக்கியுள்ளார். இந்தியா அவரை என்றுமே மறக்காது. பிரதமர் மோடி அவரை டி20, 2021 உலக கோப்பையில் விளையாட கேட்கலாம். இம்ரான்கானை 1987ம் ஆண்டு ஜியா உல் ஹக் விள்ளையாட கூறினார். பிரதமர் கேட்டால் யாரால் விளையாடாமல் இருக்க முடியும். அப்படி தோனி விளையாடினால் அவருக்கு பிரியாவிடை கொடுக்க ஒட்டுமொத்த இந்தியாவே தயாராகிவிடும் என்று கூறியுள்ளார் சோயப் அக்தர்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: