/indian-express-tamil/media/media_files/w6UseqS4DjZetGVlJMmQ.jpg)
தனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக முகமது ஷமி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Mohammed Shami | Pm Modi:இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு இந்திய மண்ணில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக ஜொலித்தார். இந்த தொடரின் போது அவருக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் அந்த வலியுடன் விளையாடினார்.
இந்த தொடருக்குப் பிறகு ஷமி கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்றுவருகிறார். ஜனவரி கடைசி வாரத்தில் லண்டனில் சிகிச்சை எடுத்த ஷமிக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாகவும் அதன்பின் அவரால் சிறிது ஓட முடிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவரது காயம் கவலைக்குரிய வகையில் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஷமிக்கு நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக முகமது ஷமி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதை எதிர்நோக்கியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
மோடி வாழ்த்து
இந்த நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது நீண்டகால காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்ததை உறுதிப்படுத்தியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஷமி இந்த காயத்தை விரைவில் சமாளிப்பார் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். "நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்தைப் பெற வாழ்த்துகிறேன். முகமது ஷமி உங்களுக்கு மிகவும் அவசியமான துணிச்சலுடன் இந்த காயத்தை நீங்கள் முறியடிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Wishing you a speedy recovery and good health, @MdShami11! I'm confident you'll overcome this injury with the courage that is so integral to you. https://t.co/XGYwj51G17
— Narendra Modi (@narendramodi) February 27, 2024
ஐ.பி.எல் 2024 - ஷமி விலகல்
இதற்கிடையில், ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வரும் முகமது ஷமி, இடது கணுக்கால் காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் 2024 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.