Advertisment

ட்ரஸ்ஸிங் ரூமிங்கிற்கு சென்று மோடி ஆறுதல்: இந்திய வீரர்கள் நெகிழ்ச்சி பதிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு, இந்திய அணி வீரர்களின் ட்ரஸ்ஸிங் ரூமிங்கிற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
PM Narendra Modi visit to Indian dressing room was loss against Australia Tamil News

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

worldcup 2023 | india-vs-australia | pm-modi | ravindra-jadeja | mohammed-shami: இந்திய மண்ணில் பரபரப்பாக நடைபெற்று வந்த 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் நேற்று அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில்  'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 

Advertisment

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 241 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து,  6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 

இந்த அபார வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு வித்திட்ட டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், இந்திய வீரர்களும் ஆட்டகளத்தில் இருந்து கண்ணீருடன் சென்ற வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலாகின. 

மோடி ஆறுதல்

இந்த நிலையில், இறுதிப் போட்டியை நேரில் காண வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்களை அவர்களது ட்ரஸ்ஸிங் ரூமிங்கிற்கு சென்று சந்தித்தார். அப்போது அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் ஜடேஜா, "நாங்கள் ஒரு சிறந்த போட்டியைக் கொண்டிருந்தோம். ஆனால் நேற்று குறுகிய காலத்தில் போட்டி முடிந்தது. நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம். ஆனால் எங்கள் மக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து வழி நடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி ட்ரஸ்ஸிங் ரூமிற்கு வந்தது சிறப்பானது மற்றும் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது" என்று பதிவிட்டுள்ளார். 

இதேபோல், இந்திய வேகப்பந்து வீச்சாளர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கட்டியணைத்து ஆறுதல் கூறும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், துரதிர்ஷ்டவசமாக நேற்று நமது நாள் அல்ல. போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. விசேஷமாக டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்து நமது உற்சாகத்தை உயர்த்தினார். நாங்கள் மீண்டு வருவோம்!" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Pm Modi India Vs Australia Worldcup Ravindra Jadeja Mohammed Shami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment