சிஎஸ்கே அணி வீரரின் மனைவியை தாக்கிய போலீஸ் அதிகாரி

அவர் மீது விசாரணை நடத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவீசந்திர ஜடேஜாவின் மனைவியை  போலீசார் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜடேஜாவின் மனைவி  ரிவபா குஜராத்தில் வசித்து வருகிறார். சம்பவதன்று  ரிவபா தனது குழந்தையுடன் ஜாம்நகர் பகுதியில் பி.எம் டபிள்யூ காரில் சென்றுக்  கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் ,  ரோட்டில் சென்றுக்  கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதனால், பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால், ஆத்திரம் அடைந்த சஞ்சய்  காருக்கு முன்பு சென்று சத்தம் போட்டுள்ளார். அத்துடன் ரிவபாவை காரை விட்டு கீழே இறங்கும்படி சண்டையிட்டுள்ளார்.

குழந்தையுடன் இந்த அவர், செய்வதறியாமல் திகைத்து காரை விட்டு கிழே இறங்கினார். அப்போது கான்ஸ்டபிள் சஞ்சய் , ஜடேஜாவின் மனைவி ரிவபாவை  கடுமையாக தாக்கியுள்ளார்.  இதனால் ரிவபா  கூச்சலிட்டு அனைவரையும் உதவிக்கு அழைத்துள்ளார். பொதுமக்கள்  வந்து தடுத்த போதும் கான்ஸ்டபிள், ரிபாவை விடாமல் தாக்கியுள்ளார். இதனால் அவர் காயமடைந்தார்.

இதுகுறித்து விவரம் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஜடேஜா மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜடேஜா மனைவியை தாக்கிய போலீஸ் கான்ஸ்டபிள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் துறை ரீதியாக நடவடிக்கை என்று  போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ரிபாவை தாக்கிய  கான்ஸ்டபிள்  இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது விசாரணை நடத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தகவலறிந்த ஜடேஜா தனது மனைவியை ஃபோனில் தொடர்புக் கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close