கோவை நவ-இந்தியாவில் நட்சத்திர உணவகத்தில் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் (PPL ) மற்றும் லோகோ அறிமுகம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரசாந்த் மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் (PPL ) லோகோவை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது, ஹிஸ்டரி மேக்கிங் என்று நான் சொல்லுவேன் - குதிரை விளையாட்டு மூலம் அதற்கான கட்டமைப்பு செய்து வருகிறோம்.
கிரிக்கெட்டில் ஐ.பி.எல் போன்று இனி பி.பி.எல் இருக்கும் எனவும் சாதாரண மக்களும் குதிரை ஏற்றம் போன்றவை இருக்க வேண்டும். சின்ன வயதில் இருந்து குதிரை விளையாட்டு எனக்கு பிடிக்கும். என்னுடைய படங்களிலும் குதிரைகளை கொண்டு வந்து விடுவேன். குதிரை எனக்கு பிடித்த விலங்கு. படப்பிடிப்பு போது குதிரையில் பயணித்த நிகழ்வுகளை பகிர்ந்தார். தமிழர்கள் ஒரு செயலை செய்யும் போது அதை ஆதரிக்க வேண்டும்.
அந்தகன் ஆகஸ்ட் மாதம் வெளியீடு உள்ளது. அந்தகனில் எல்லா விதமான பிரசாந்தை பார்க்கலாம். அந்தகன் படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன். GOAT படம் பண்றது காரணமாக மூன்று பேருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். கடந்த காலங்களில் மல்டி ஸ்டார் படம் செய்து உள்ளேன்.
தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போட்டி நல்லது, என் மீது அன்பு கொண்ட ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் குதிரை யார் வேண்டுமானால் ஒட்டல்லாம். போலோ விளையாட்டு அப்படி கிடையாது பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் நல்ல கதை இருந்தால் முழு நேர காமெடி படம் செய்ய தயார் என்றும் அவர் கூறினார். போலோ இப்போது தான் அமைகிறது விரைவில் பார்ப்பீர்கள்.
அப்பா திறமையான இயக்குநர் டெக்னாலஜி கற்றுக் கொண்டு அதை படத்தில் பயன்படுத்தியுள்ளார். 2026 அரசியலுக்கு காலம் உள்ளது. என்னுடைய அரசியல் பயணம் குறித்து அப்பறம் பேசலாம் என தெரிவித்த அவர் 2026 தேர்தல் களத்தில் மக்களுக்கு யார் நல்லது பண்றாங்களோ அவர்களுக்கு ஆதரவளிப்பேன் எனத் தெரிவித்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரக்கூடிய நடிகர் பிரசாந்தின் அந்தகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“