பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறுகிறார்.
சமீபத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விமர்சனம் செய்தார்.
ரிக்கி பாண்டிங்குக்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
"அவர் ஆஸ்திரேலியாவைப் பற்றி பேச வேண்டும். பாருங்கள், விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இன்னும் விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர் மேலும் மேலும் சாதிக்க விரும்புகிறார்கள். அவர்கள் வெற்றிக்காக பசியுடன் இருக்கிறார்கள் மற்றும் பல ஆண்டுகளாக நாட்டிற்காக சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
மற்ற வீரர்கள் கூட நன்றாக விளையாடுகிறார்கள், நாங்கள் ஒரு குழுவாக முன்னேறுவோம் என்று நான் நம்புகிறேன். விராட் மற்றும் ரோஹித் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என்று கம்பீர் கூறியுள்ளார்.
பாண்டிங் தனது சமீபத்திய ஐசிசி மதிப்பாய்வில், கோலியின் ஃபார்ம் குறித்து கவலை தெரிவித்தார்.
நான் மறுநாள் விராட் பற்றிய ஒரு புள்ளிவிவரத்தைப் பார்த்தேன் - கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் இரண்டு (மூன்று) டெஸ்ட் சதங்களை மட்டுமே அடித்துள்ளார் என்று அதில் பதிவாகி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக இன்னும் யாரும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், விராட் கோலி ஆறு இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, ரோஹித் சர்மா 6 அவுட்களில் 91 ரன்கள் எடுத்தார். இருப்பினும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக தனது மூத்த வீரர்களின் ஃபார்ம் குறித்து தான் கவலைப்படவில்லை என்று கம்பீர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரோஹித் மற்றும் விராட் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, என்று அவர் கூறினார். ஆனால் அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய சாதித்திருக்கிறார்கள், தொடர்ந்து அதைச் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
கோலி - ரோகித் ஃபார்ம் பற்றி கேள்வி எழுப்பிய பாண்டிங்: பதிலடி கொடுத்த கம்பீர்
பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறுகிறார்.
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.