Advertisment

கோல்கீப்பர் பேக்கிற்கு 'எக்ஸ்ட்ரா சார்ஜ்' போட்ட விமான நிறுவனம்… டுவிட்டரில் விளாசிய இந்திய வீரர்!

PR Sreejesh - Indian Hockey Player - won the bronze medal in the 2020 Tokyo Olympics Tamil News: இந்திய ஹாக்கி கோல்கீப்பர் வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், தனது கோல்கீப்பர் பேக்கிற்கு 'எக்ஸ்ட்ரா சார்ஜ்' போட்ட விமான நிறுவனத்தை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக விளாசி இருக்கிறார்.

author-image
WebDesk
New Update
PR Sreejesh, Slams IndiGo For Charging Extra Money For Handling "Goalkeeper Baggage"

India's legendary hockey goal-keeper PR Sreejesh Tamil News

Olympic Medal-Winning Hockey Player PR Sreejesh Tamil News: 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது. அந்த அணியில் கோல்கீப்பராக களமாடியவர் தான் பி.ஆர்.ஸ்ரீஜேஷ். கேரளாவைச் சேர்ந்த இவர், 1980 க்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்தியா முதல் ஹாக்கி பதக்கத்தை வென்றதற்கு முக்கிய பங்கு ஆற்றி இருந்தார்.

Advertisment
publive-image

இந்நிலையில், இந்திய ஹாக்கி கோல்கீப்பர் வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், தனது கோல்கீப்பர் பேக்கிற்கு 'எக்ஸ்ட்ரா சார்ஜ்' போட்ட விமான நிறுவனத்தை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக விளாசி இருக்கிறார்.

அவர் உள்நாட்டு கேரியர் விமானமான இண்டிகோவில் தனது கோல்கீப்பர் பேக்கை லக்கேஜ்ஜாக அனுப்பிய நிலையில், அவர்கள் 1500 ரூபாயையை எக்ஸ்ட்ரா சார்ஜ்ஜாக போட்டுள்ளனர். இந்நிலையில், பி.ஆர்.ஸ்ரீஜேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் "சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்) என்னை 41 இன்ச் ஹாக்கிஸ்டிக் கொண்டு விளையாட அனுமதித்துள்ளது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் 38 இன்ச்க்கு மேல் எதையும் எடுத்துச் செல்ல அனுமதி கொடுப்பதில்லை.

என்ன செய்வது? கோல்கீப்பர் லக்கேஜ்ஜை கையாள கூடுதலாக ரூ.1500 செலுத்த வேண்டியுள்ளது.” " என்று அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர் கூடுதல் பேக்கேஜ் கட்டணத்திற்கான IndiGo ரசீது புகைப்படத்தையும், “#loot” என்ற ஹேஷ்டேக்கையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Tokyo Olympics Indian Hockey Indigo Airlines Indigo Hockey Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment