Advertisment

'குஜராத் கை ஓங்கும், ஆனா கோப்பையில் சி.எஸ்.கே கை தான் இருக்கும்': கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து

இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கை ஓங்கும், ஆனால் கோப்பையில் சி.எஸ்.கே அணியின் கை தான் இருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து தெரிவித்தார்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK vs GT IPL 2023 Final - pradeep muthu cricket commentator

CSK vs GT IPL 2023 Final - pradeep muthu cricket commentator

ச. மார்ட்டின் ஜெயராஜ் – Martin Jeyaraj

Advertisment

இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வாகை சூடும் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி - 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

publive-image

கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து கருத்து

இந்நிலையில், இன்று அரங்கேறவிருக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கை ஓங்கும், ஆனால் கோப்பையில் சி.எஸ்.கே அணியின் கை தான் இருக்கும் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து தெரிவித்தார்.

publive-image

குஜராத் - சென்னை இறுதிப்போட்டி தொடர்பாக அவர் நம்மிடம் பேசுகையில், "போட்டி ரொம்பவே கடினமானதாக இருக்கும். குஜராத்தை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்துவது சவாலான ஒன்றுதான். அவர்களின் ஒரு பிரச்சனை என்னவென்றால், தொடக்க வீரர் சுப்மன் கில்லை தான் மலைபோல் நம்பியுள்ளார்கள். அவர் தான் அங்கு ஹீரோவாக ஜொலிக்கிறார். இந்த வருடம் மட்டும் அவர் 6 சதம் விளாசியுள்ளார். அதில் ஐந்தை இங்கே தான் அடித்துள்ளார். அதனால் அவரது விக்கெட் முக்கியமானதாக இருக்கும். அவரது விக்கெட்டை தீபக் சாஹர் பவர்பிளேயில் வீழ்த்தினால் சி.எஸ்.கே கோப்பை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.

publive-image

இதேபோல், போட்டியில் எந்த மாதிரியான பிட்ச் (ஆடுகளம்) கொடுக்கிறார்கள் என்பதும் முக்கியமாதனாக இருக்கும். பொதுவாக இறுதிப்போட்டியில் பேட்டிங் பிட்ச் தான் கொடுக்கப்பார்கள். மும்பைக்கு எதிரான போட்டியில் இருந்த பிட்ச் போல் இருந்தால், அது அவர்களுக்குத் தான் கூடுதல் பலம் கொடுக்கும்." என்றார்.

போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்குமா? என்று நாம் அவரிடம் வினவியபோது, "டாஸ் கண்டிப்பாக முக்கியமான ஒன்றாக இருக்கும். குவாலிபையர் 2ல் டாஸ் வென்ற மும்பை சேஸிங் செய்கிறோம் என்றார்கள். ஆனால், குஜராத் 200 ரன்களை குவித்தார்கள். முக்கிய போட்டியில் இதுபோன்ற ஸ்கோர் பெரிய விஷயமாக இருக்கும். 200 ரன்கள் 220 ரன்களாக தெரியும். அதேபோல் தான் மும்பை அணியினர் 230 ரன்கள் 250 ரன்களாக உணர்ந்தனர்.

publive-image

பேட்டிங்கை பொறுத்தவரையில், இரு அணிகளுமே நல்ல பேட்டிங்கை வரிசையை கொண்டுள்ளார்கள். குஜராத்தில் கில் தான் பயமுறுத்துகிறார். 180 - 190 ரன்கள் அடித்தால் போட்டி கடுமையாக தான் இருக்கும். 200-க்கு மேல் அடித்தால் எந்த அணி முதலில் பேட்டிங் செய்கிறோதோ அந்த அணிதான் வெல்லும். அதனால் டாஸ் ரொம்பேவே முக்கியமாக இருக்கும். இந்த பிளேஆஃப்-பில் இதுவரைக்கும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி கண்டுள்ளன. இதுபோன்ற முக்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி பெரிய ஸ்கோரை எடுத்துவிட்டால், எதிரணிக்கு அழுத்தம் அதிகரிக்கும். அதை எந்த அணி செய்யும் என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும்." என்று கூறினார்.

"சென்னை அணியில் ருதுராஜ் – டெவோன் கான்வே சூப்பர் பார்ட்னர்ஷிப். காலங்காலமாக சென்னைக்கு இதுபோன்ற சிறப்பான பார்ட்னர்ஷிப்கள் கிடைத்துள்ளது. அவர்கள் இருவருக்கும் நல்ல புரிந்து கொள்ளல் இருக்கிறது. ஒருவர் அடித்து ஆடும் போது இன்னொருவர் சிங்கிள் எடுத்துக்கொடுப்பது போன்றவை அவர்களுக்கு அதிகம் கைகொடுக்கிறது. உண்மையில் அவர்கள் இருவரின் பேட்டிங் ரசிக்கும்படியாக உள்ளது.

publive-image

பவுலிங்கை பொறுத்தவரையில், இந்த பவுலிங் வரிசையைக் கொண்டு இந்த அளவிற்கு விளையாட முடியும் என்றால் அது தோனியால் மட்டுமே என சமீபத்தில் வீரேந்தர் சேவாக் குறிப்பிட்டார். அதுபோல் சென்னை நல்ல பவுலிங் வரிசையுடன் உள்ளது. குஜராத் அணி சென்னையில் தமிழக வீரர் சாய் சுதர்சதனை ஆடவில்லை. ஆனால், மும்பைக்கு எதிராக அவர் விளையாடினார். அவருக்கு எதிராக ஜடேஜா பந்துவீசுவார்.

publive-image

பவர்பிளேயில் தீபக் சாஹரும், டெத் ஓவர்களில் பதிரானாவும் பந்துவீசுவார்கள். அவர்கள் இருவரும் விக்கெட்டுகளை கைப்பற்றுவது அவசியம். குறிப்பாக, கில்லின் விக்கெட்டை தீபக் சாஹர் வீழ்த்த வேண்டும். அது குஜராத்துக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும்." என்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Ipl Ahmedabad Ipl Cricket Ipl News Ipl Finals Gujarat Titans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment