Candidates Chess 2024 | Pragnanandha: உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை என்று மொத்தம் 14 சுற்றில் மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Candidates Chess 2024 Live Updates
கேன்டிடேட் செஸ் - 6 சுற்று - பிரக்ஞானந்தா அபாரம்
ஆண்கள் பிரிவில் இன்று வியாழக்கிழமை நடந்த 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 45-வது நகர்த்தலில் நிஜாத் அபாசோவை வீழ்த்தினார். இந்த அபார வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா 3.5 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி உள்ளார். 2ம் இடத்தில் இந்தியாவின் குகேஷ் டி இருக்கிறார். 3ம் இடத்தில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா உள்ளார். 7-வது சுற்றில் பிரக்ஞானந்தா ஃபேபியானோ கருவானாவை எதிர்கொள்ளும் நிலையில், அவரையும் வீழ்த்தும் சூழலில் அவர் தரவரிசைப் பட்டியலில் அதிரடியாக முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா அடுத்தபடியாக 5வது இடத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளார். 6வது இடத்தில் இந்தியாவின் சந்தோஷ் குஜராத்தி விதித், 7வது இடத்தில் அஜர்பைஜானின் நிஜாத் அபாசோ, 8வது இடத்தில் ஈரானின் அலிரேசா ஃபிரோஸ்ஜா ஆகியோரும் உள்ளனர்.
7-வது சுற்று - மோதிக்கொள்ளும் வீரர், வீராங்கனைகள் பட்டியல்:
ஆடவர்
ஹிகாரு நகமுரா- இயன் நெபோம்னியாச்சி
ஃபேபியானோ கருவானா - பிரக்ஞானந்தா, ஆர்
நிஜாத் அபாசோவ் - சந்தோஷ் குஜராத்தி விதித்
அலிரேசா ஃபிரோஸ்ஜா - குகேஷ் டி
பெண்கள்
கேடரினா லக்னோ - நூர்கியுல் சலிமோவா
அலெக்ஸாண்ட்ரா கோரியாச்சினா -
டான் சோங்கி
அன்னா முசிச்சுக் - ஹம்பி கோனேரு
லீ டிங்ஜி - வைஷாலி ரமேஷ்பாபு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“