/indian-express-tamil/media/media_files/WblpfdcIieAHlhkcal8j.jpg)
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்த இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா.
Pragnanandha: நெதர்லாந்தில் உள்ள விஜ்க் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடந்த 4வது சுற்றில் இந்திய இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்கொண்டார்.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் கறுப்புக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து சிறப்பாக காய்களை நகரத்தி வந்த அவர் சீன வீரர் டிங் லிரனை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் பிரக்ஞானந்தா. இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதன்முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தினார்.
ஃபிடே-வின் மதிப்பீட்டு புள்ளிகள் படி பிரக்ஞானந்தா 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை முந்தினார். பிரக்ஞானந்தா 2748.3 லைவ் ரேட் புள்ளிகளைப் பெற்றுள்ளார். அதேவேளையில், விஸ்வநாதன் ஆனந் 2748 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
பிரக்ஞானந்தா ஆனந்துக்குப் பிறகு கிளாசிக்கல் செஸ்ஸில் நடப்பு உலக சாம்பியனை தோற்கடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார்.
சுவாரசியமாக, கடந்தாண்டு ஜனவரி 17 ஆம் தேதி இதே நிகழ்வில் பிரக்ஞானந்தா அதே கருப்புக் காய்களுடன் சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து இருந்தார். அப்போது, டிங் லிரன் உலகின் நம்பர் 2 ஆக இருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Praggnanandhaa defeats world champion Ding Liren at Tata Steel Masters to become India No 1
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.