செஸ் சாதனை... பிரக்ஞானந்தாவுக்கு பதவி வழங்கும் இந்தியன் ஆயில்
Grandmaster R Praggnanandhaa was formally inducted into Indian oil corporation (IOC) at a function graced by its chairman Shrikant Madhav Vaidya Tamil News: உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Grandmaster R Praggnanandhaa was formally inducted into Indian oil corporation (IOC) at a function graced by its chairman Shrikant Madhav Vaidya Tamil News: உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Grandmaster R Praggnanandhaa - Indian oil corporation IOC chairman Shrikant Madhav Vaidya
Rameshbabu Praggnanandha Tamil News: உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்றுள்ள செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டி 9 சுற்றுகளாக நடந்து வரும் நிலையில், இதில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவும் கலந்துகொண்டுள்ளார்.
Advertisment
16வயதான பிரக்ஞானந்தா கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற கால் இறுதி சுற்றில், 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யி-யை தோற்கடித்திருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று இரவு நடைபெற்ற அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை அவர் எதிர்கொண்டார். இந்த சுற்றில் 2-2 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்ததால், வெற்றியை தீர்மானிக்க பிளே ஆஃப் ஆட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து நடந்த டை பிரேக்கரில் 1.5 – 0 .5 என்ற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை வீழ்த்திய பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதேபோல், மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதிய சீனா வீரர் டிங் லிரன் வெற்றி பெற்றார்.
Advertisment
Advertisements
இந்நிலையில், நேற்று நடைபெற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதி போட்டியில் சீன வீரர் டிங் லிரனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த இந்த ஆட்டம் 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது. இறுதியில் டை பிரேக்கரில் சீன வீரர் திங் லிரன் வெற்றி பெற்றார். இதனால், தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார்.
இந்த நிலையில், உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா பணிக்கால அடிப்படையில் தனது 18 வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறுகையில், ஐஓசி எல்லா வழிகளிலும் ப்ராக்கை ஆதரிக்கும். இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒரு துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பைக் உருவாக்கியுள்ளது.
உண்மையில் கடந்த அக்டோபர் மாதம், மாண்புமிகு ஜனாதிபதி ஐஓசியை சிறந்த விளையாட்டு பொதுத்துறை நிறுவனமாக கௌரவித்தார். அவர் (ப்ராக்) அவரது சமீபத்திய போட்டிகளில் மிகவும் வெளிப்படையான தேர்வாக இருந்தார். ஐஓசி ஊக்குவிக்கும் பெரிய விளையாட்டுகளில் செஸ் எப்போதும் ஒன்றாகும். ஐஓசிக்காகவும் நாட்டிற்காகவும் அற்புதங்களைச் செய்ய அவரிடம் (ப்ராக்) ஒரு பெரிய திறனை நாங்கள் காண்கிறோம்.
ப்ராக் தற்போது தனது 11ம் வகுப்பு போர்டு தேர்வுகளை எழுதுகிறார். ஆன்லைன் செசபிள் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்கும் போது தேர்வுகளை எழுதுவது "அலுப்பானது மற்றும் சுவாரஸ்யமானது" என்று அவர் விவரித்திருந்தார்.
ஆன்லைன் செஸ்ஸை விட ஓவர்-தி-போர்டு விளையாடுவதை தான் விரும்புவதாகவும் ப்ராக் கூறியிருந்தார். எனக்கு ஓவர்-தி-போர்டு மிகவும் பிடிக்கும். அது ஒரு வித்தியாசமான விஷயம். உங்களால் உணர முடியும். ஓவர்-தி-போர்டில், செஸ் மீது முழு கவனம் இருக்கும். வீட்டில் அது வேறு,” என்று கூறியுள்ளார்.
ஐஓசி தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யாவிடமிருந்து தனது வேலை வாய்ப்பு தொடர்பான ஒப்பந்த கடித்தை பெற்ற பின் பேசிய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, "“ஐஓசியில் இருக்கும் பல செஸ் வீரர்களை அந்த நிறுவனம் எப்படி ஆதரிக்கிறது என்பதை நான் அறிவேன். ஐஓசியில் இணைந்தது பெருமையாக உள்ளது. இது எனது செஸ் வாழ்க்கையில் எனக்கு பெரும் ஆதரவாக இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil