Rameshbabu Praggnanandha Tamil News: உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்றுள்ள செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டி 9 சுற்றுகளாக நடந்து வரும் நிலையில், இதில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவும் கலந்துகொண்டுள்ளார்.
16வயதான பிரக்ஞானந்தா கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற கால் இறுதி சுற்றில், 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யி-யை தோற்கடித்திருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று இரவு நடைபெற்ற அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை அவர் எதிர்கொண்டார். இந்த சுற்றில் 2-2 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்ததால், வெற்றியை தீர்மானிக்க பிளே ஆஃப் ஆட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து நடந்த டை பிரேக்கரில் 1.5 - 0 .5 என்ற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை வீழ்த்திய பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த பிரமாண்ட வெற்றியின் மூலம் இந்தச் சாதனையை எட்டிய முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரிக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் அதிகாலை 2 மணிக்கு மிகவும் தாமதமாக முடிந்த நிலையில், அப்போது பேசிய இருந்த பிரக்ஞானந்தா தான் இன்று காலை 8.45 மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும் என்றும், இன்று நடைபெற உள்ள தேர்வில் தான் தூங்காமல் இருக்க முயற்சிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
"எனது போர்டு தேர்வுகளுக்கு நான் காலை 8.45 மணியளவில் பள்ளியில் இருக்க வேண்டும், இப்போது அதிகாலை 2 மணி. அதனால் நான் தூங்கச் செல்ல வேண்டும், தேர்வு நேரத்தில் தூங்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். நான் தேர்ச்சி பெறுவேன் என்று நம்புகிறேன்" என்று இளம் கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.
இந்த தொடரில் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதிய சீனா வீரர் டிங் லிரன் வெற்றி பெற்றார். இந்நிலையில், செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதிப்போட்டியில் சீனா வீரர் டிங் லிரன் உடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதுகிறார்.
Congratulations @rpragchess for the victory over Anish in the semifinal of #ChessableMasters ! The ability to beat strong players despite having a bad score in the past is amazing. Proud of you kutti.
— Ramesh RB (@Rameshchess) May 24, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.