Advertisment

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டி: பிரக்ஞானந்தா தோல்வி; கார்ல்சனுக்கு முதல் பட்டம்

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா - கார்ல்சன் மோதும் டை பிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Praggnanandhaa vs Magnus Carlsen: Chess World Cup 2023 Final LIVE updates in tamil

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில், பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளார்கள்.

'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய இளம் வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், உலக 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதி வருகின்றனர்.

Advertisment

இரண்டு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்ட இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இதேபோல், இவ்விரு வீரர்கள் இடையேயான இறுதிப்போட்டியின் 2-வது சுற்று 30-வது நகர்த்தலில் டிரா ஆனது. அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் உள்ளார்கள். இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது.

டைபிரேக்கரில் மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதல்

இந்த நிலையில், உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா - கார்ல்சன் மோதும் டை பிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.

இந்த ஆட்டத்தில், 41 நகர்த்தல்கள் வரை போட்டி சமநிலையில் காணப்பட்டது. எனினும், பிரக்ஞானந்தாவுக்கு நேரம் குறைவாக இருந்தது. இதனால், அவரால் வெற்றி பெற முடியாமல் போனது.

சிறிது நேரத்திற்கு பின்னர் 2-வது சுற்று போட்டி தொடங்கியது. இதில், கருப்பு காய்களுடன் போட்டியை ஆட தொடங்கிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இந்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், ரேபிட் முறையில் 2 போட்டிகள் நடைபெறும் சூழல் இருந்தது.

ஆனால் 2-வது சுற்று ஆட்டத்திலும் கார்ல்சன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இதனால், பிரக்ஞானந்தா வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருந்தது. கார்ல்சன் அதிரடியாக காய்களை நகர்த்தி வெற்றி பெற்றார். இதனால், உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் தனது முதல் பட்டத்தை வென்றார்.

இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் 2வது சுற்றிலும் கார்ல்சன் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரக்ஞானந்தாவை 2.5 - 1.5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய கார்ல்சன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைபிரேக்கர் விதிகள்

'ரேபிட்' முறையில் நடக்கும் டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் விளையாடுவார்கள். ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்களில் மோதுவார்கள். அதன் பிறகு 5 நிமிடம் கொண்ட ஆட்டங்கள், 3 நிமிடம் ஆட்டம் என்று முடிவு கிடைக்கும் வரை நீடிக்கும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chess Sports Cricket International Chess Fedration Pragnanandha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment