வி கெசா ஹெட்டெனி மெமோரியல் (V Geza Hetenyi Memorial) சூப்பர் ஜி.எம் (கிராண்ட்மாஸ்டர்) செஸ் போட்டிகள் ஐரோப்பா நாடான ஹங்கேரியில் நடைபெற்றது. 10 வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் களமாடிய இந்திய இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா 6.5 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். மேலும், போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் வாகை சூடினார்.
17 வயதான பிரக்ஞானந்தா இந்தப் போட்டியில் 5 வெற்றிகளைப் பதிவுசெய்தார். 3 ஆட்டங்களை சமன் செய்தார் மற்றும் 5வது சுற்றில் ஈரான் வீரர் அமீன் தபடபாய்-க்கு எதிராக மட்டுமே தோல்வியை பெற்றார். 9 சுற்று ஆட்டத்திற்குப் பிறகு, அமீன் தபடாபாய் மற்றும் ரஷ்யாவின் சனன் ஸ்ஜுகிரோவ் ஆகியோரை விட ஒரு புள்ளியில் முன்னேறினார்.
இறுதிச் சுற்றில், அவர் போலந்து ராடோஸ்லாவ் வோஜ்தாஸ்ஸெக்கிற்கு எதிராக வெள்ளைக் காய்களுடன் சமநிலை பெற்றார். இதன்மூலம் அவர் இப்போது 2707.3 நேரடி மதிப்பீட்டைப் பெற்றுள்ளார்.
ஸ்ஜுகிரோவ், பர்ஹாம் மக்சூட்லூ (ஈரான்), ஆடம் கோசாக் (ஹங்கேரி) மற்றும் பீட்டர் ப்ரோஹாஸ்கா (ஹங்கேரி) ஆகியோருக்கு எதிராகவும் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். அவர் பாவெல் எல்ஜனோவ் (உக்ரைன்), மாக்சிம் மட்லகோவ் (ரஷ்யா) மற்றும் வோஜ்தாசெக் ஆகியோருக்கு எதிராக தனது கடைசி மூன்று ஆட்டங்களை டிரா செய்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil