பாட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனுக்கு இந்திய பாட்மிண்டன் சங்கம் சார்ப்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
இந்திய பாட்மின்டன் சங்கம் உருவாக்கியுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் முதல் வீரர் என்ற பெருமை பிரகாஷ் படுகோனேயே சேரும். பாட்மிண்டன் விளையாட்டில் ஆற்றிய சிறந்த சேவை மற்றும் சிறந்த பங்ளிப்பை கவுரவிக்கும் வகையில், பிரகாஷ் படுகோனேக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகை தீபிகாவின் தந்தையான இவர், 1980 - களில் நடைப்பெற்ற சாம்பியன் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல்வேறு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வென்றவர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/award-1-300x217.jpg)
ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை 8 முறை பெற்றவர், அத்துடன், 1983 உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம், 1978 காமன்வெல்த் போட்டியில் தங்கம் என, இவர் படைத்த சாதனைகள் ஏராளம். இத்தகைய சிறப்பான வீரரை கவுரவிக்கும் விதமாக இந்திய பாட்மின்டன் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் வழங்குவதாக இந்திய பாட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா விஸ்வா சர்மா அறிவித்திருந்தார். விருது வழங்குவதற்கான நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/padukone1-300x217.jpg)
இதில், பாட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனே, தனது மனைவி, மகள் மற்றும் குடும்பத்துடன் கலந்துக் கொண்டார். பிரகாஷ் விருதை வாங்கிய தருணம் அரங்கமே எழுந்து நின்று அவருக்கும் மரியாதை செலுத்தியது. அதன் பின்பு மேடை ஏறிய அவர் பேசியதாவது, “நான் பணம், புகழ், பெயர் இவற்றிற்காக விளையாடவில்லை. தனிப்பட்ட முறையில், பாட்மிண்டன் மீது நான் கொண்டிருக்கும் அதீக காதல் தான் என்னை இவ்வளவு தூரம் வரவைத்துள்ளது. மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கையில் இந்த விருது வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தை எனது வாழ் நாளில் என்னால் மறக்க முடியாது. என்னுடைய இளமைக்கால விளையாட்டு தருணங்களெல்லாம் இப்போது ஞாபகத்திற்கு வந்து செல்கிறது. ” என்றார்.