வாரிக்கொடுத்த பிரசித் கிருஷ்ணா: டி-20-யில் டாப் 5 மோசமான பவுலிங்

டி20 கிரிக்கெட்டில் டாப் 5 மோசமான பந்துவீச்சு குறித்தும், அதனை பதிவு செய்த பவுலர் குறித்தும் இங்கு பார்க்கலாம்.

டி20 கிரிக்கெட்டில் டாப் 5 மோசமான பந்துவீச்சு குறித்தும், அதனை பதிவு செய்த பவுலர் குறித்தும் இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Prasidh Krishna most expensive spell vs Aus List of 5 worst spells in T20I tamil news

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது.

India Vs Australiaஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி 2-0 என்கிற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. 

Advertisment

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. 

வாரிக்கொடுத்த பிரசித் கிருஷ்ணா

இந்த போட்டியில் இந்திய அணி 222 ரன்களை எடுத்த போதிலும், ஆஸ்திரேலிய அணியிடம் பரிதாபமாக தோல்வி கண்டது. இந்திய அணி தரப்பில் 4 ஓவர்களை வீசிய பிரசித் கிருஷ்ணா விக்கெட் எதுவும் எடுக்காமல் 68 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் அவர் டி20 போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த 6வது வீரர் என்கிற மோசமான சாதனையைப் பதிவு செய்தார். 

டாப் 5 மோசமான பவுலிங் 

இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் டாப் 5 மோசமான பந்துவீச்சு குறித்தும், அதனை பதிவு செய்த பவுலர் குறித்தும் இங்கு பார்க்கலாம். 

சிஏகே ராஜிதா

Advertisment
Advertisements

இலங்கை வீரரான சிஏகே ராஜிதா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 27அக்டோபர் 2019ம் ஆண்டு அன்று நடந்த போட்டியில் 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 75 ரன்களை விட்டுக்கொடுத்தார். 

சிபி சோல்

ஸ்காட்லாந்து வீரரான சிபி சோல் நியூசிலாந்து அணிக்கு எதிராக எடின்பர்க்கில் 27 ஜூலை 2022ம் ஆண்டு நடந்த போட்டியில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட்  மட்டும் எடுத்து 72 ரன்களை விட்டுக்கொடுத்தார். 

டி டுரன்

துருக்கி வீரரான  டி டுரன் செக் குடியரசு அணிக்கு எதிராக இல்ஃபோவ் கவுண்டியில் 30 ஆகஸ்ட் 2019ம் ஆண்டில் நடந்த போட்டியில்  4 ஓவர்களில் ஒரு விக்கெட்  மட்டும் எடுத்து 70 ரன்களை விட்டுக்கொடுத்தார். 

பிஜே மெக்கார்த்தி

அயர்லாந்து வீரரான  மெக்கார்த்தி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கிரேட்டர் நொய்டாவில்  12 மார்ச் 2017ம் ஆண்டில் நடந்த போட்டியில் 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்கமால் 69 ரன்களை விட்டுக்கொடுத்தார். 

கேஜே அபோட்

4.0 - 68 1 17.00 தென் ஆப்பிரிக்கா வீரரான கேஜே அபோட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் 11 ஜனவரி 2015ம் ஆண்டில் நடந்த போட்டியில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட்  மட்டும் எடுத்து 68 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

India Vs Australia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: