Advertisment

இது சிறிய சாதனை அல்ல: பிரக்ஞானந்தாவை வாழ்த்திய நரேந்திர மோடி!

செஸ் உலக கோப்பை போட்டியில் வெள்ளி வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Prime Minister Modi congratulated Pragnananda who won the 2nd place in the World Cup Chess Tournament

Tamil news live

செஸ் உலக கோப்பை போட்டிகள் அஜர்பைஜானில் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனுடன் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மோதினார்.

ஆட்டத்தின் முதல் இரு ஆட்டங்கள் டையில் முடிந்தன. இந்த நிலையில் வெற்றியை தீர்மாளிக்கும் இன்றைய ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, வெள்ளி வென்றார்.

Advertisment

அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “உலகக் கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

அவர் தனது விதிவிலக்கான திறமைகளை வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் வல்லமைமிக்க மேக்னஸ் கார்ல்சனுக்கு கடுமையான போட்டியை வழங்கினார்.

இது சிறிய சாதனையல்ல. அவரது வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், “உலக கோப்பை இறுதிப் போட்டிக்கான உங்கள் பயணம் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

,

இறுதி முடிவு இருந்தபோதிலும், உங்கள் சாதனை 140 கோடி மக்களின் கனவுகளுடன் எதிரொலிக்கிறது. முழு நாடும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stalin Chess Pragnanandha Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment