scorecardresearch

செல்ஃபி மறுப்பு சர்ச்சை: கைதான இன்ஸ்டா பிரபலத்திற்கு ஜாமின்… பிரித்வி ஷா மீது 12 பிரிவுகளில் புகார்!

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் ஆஷிஷ் சுரேந்திர யாதவ், பிரிஜேஷ் ஆகியோர் மீது சப்னா கில் தரப்பில் 12 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Prithvi Shaw selfie row; Sapna Gill files case Tamil News
Social media Influencer Sapna Gill files molestation FIR against india cricketer Prithvi Shaw Tamil News

Influencer Sapna Gill files case against Prithvi Shaw Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான பிரித்வி ஷா (23), கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார். அப்போது, அங்கு வந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமான சப்னா கில் ஒரு செல்ஃபி புகைப்படம் எடுக்க வேண்டுமென பிரித்வி ஷாவிடம் கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சப்னா கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரித்வி ஷாவை கடுமையாக தாக்கினார். மேலும், பிரித்வி ஷா-வின் காரையும் அந்த கும்பல் அடித்து உடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரித்வி ஷா அளித்த புகாரின் அடிப்படையில் சப்னா கில் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்திய சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். சப்னா கில் கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்ட நிலையில், அனைவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, சப்னா கில் இன்று மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் மேலும் 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சப்னா கில். அந்த ஜாமின் மனுவை விசாரித்த அந்தேரி நீதிமன்றம் சப்னாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து சப்னா கில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், சப்னா கில் தரப்பில் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா அவரது நண்பர்கள் ஆஷிஷ் சுரேந்திர யாதவ், பிரிஜேஷ் ஆகியோர் மீது 11 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள சப்னா கில்லின் வழக்கறிஞர் அலி காஷிப் தேஷ்முக், சட்ட விரோதச் செயல்களுக்காக பிரித்வி ஷா அவரது நண்பர்கள் ஆஷிஷ் சுரேந்திர யாதவ், பிரிஜேஷ் மற்றும் பிறர் மீது இந்திய தண்டைனைச் சட்டம் 34, 120b, 144, 146, 148, 149, 323, 323, 324, 351, 354 மற்றும் 509 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Prithvi shaw selfie row sapna gill files case tamil news