புரோ கபடி லீக் தொடர்: மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய தமிழ் தலைவாஸ்!

Pro Kabaddi League 2019, TAM vs BEN: பெங்கால் அணி ரெய்டில் 21 புள்ளிகள், டேக்கிளில் 10 புள்ளிகள், ஆல் அவுட்டில் 4 புள்ளிகள் என மொத்தம் 35 புள்ளிகள் பெற்று வெற்றிப் பெற்றது

By: Updated: August 29, 2019, 10:41:26 PM

Tamil Thalaivas vs Bengal Warriors: புரோ கபடி 2019 தொடரின் டில்லியில் நடக்கும் 64வது லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில், 35-26 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றிப் பெற்றது.

தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரையில் கடந்த 23ம் தேதி சென்னையில் நடந்த போட்டியில் யு மும்பா அணியிடம் வீழ்ந்தது. அதே போல பெங்கால் வாரியர்ஸ் அணி, ஹரியானா அணியிடம் மண்ணைக்கவ்வியது.

தமிழ் தலைவாஸ் அணி 10 போட்டியில் பங்கேற்று 3 வெற்றி, 5 தோல்வி, 2 டை என 30 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் பெங்கால் வாரியர்ஸ் 10 போட்டியில் பங்கேற்று 5 வெற்றி, 3 தோல்வி, 2 டை என 50 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் அணி ரெய்டில் 21 புள்ளிகள், டேக்கிளில் 10 புள்ளிகள், ஆல் அவுட்டில் 4 புள்ளிகள் என மொத்தம் 35 புள்ளிகள் பெற்று வெற்றிப் பெற்றது. டேக்கிளில் சொதப்பிய தலைவாஸ் 26 புள்ளிகள் மட்டுமே எடுத்தது.

இந்த சீசனில், தமிழ் தலைவாஸின் ஆறாவது தோல்வி இதுவாகும்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Pro kabaddi 2019 tamil thalaivas bengal warriors

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X