'பூஸ்ட்' கொடுக்கும் பவன் ஷெராவத்: இந்த முறை தமிழ் தலைவாஸ் பலம்- பலவீனம் என்ன?
Tamil Thalaivas strength and weaknesses; Pro Kabaddi League (PKL) Tamil News: தமிழ் தலைவாஸின் மிகப்பெரிய பலம் இம்முறை பவன் செராவத் தான். அவரது வருகை ரெய்டிங் பிரிவில் உள்ள மற்ற அணிகளுக்கு அந்த அணி கடும் சவாலை கொடுக்கும்.
Tamil Thalaivas strength and weaknesses; Pro Kabaddi League (PKL) Tamil News: தமிழ் தலைவாஸின் மிகப்பெரிய பலம் இம்முறை பவன் செராவத் தான். அவரது வருகை ரெய்டிங் பிரிவில் உள்ள மற்ற அணிகளுக்கு அந்த அணி கடும் சவாலை கொடுக்கும்.
Tamil Thalaivas - Pro Kabaddi 2022 Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடத்தப்பட உள்ளன.
Advertisment
இந்தத் தொடருக்கான 5வது சீசனில் தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாக கொண்ட உருவாக்கப்பட்ட அணி தமிழ் தலைவாஸ். கடந்த நான்கு சீசன்களில் ஒருமுறை கூட பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத இந்த அணி, அதை மாற்றும் முயற்சியில் இம்முறை ஒரு வலுவான அணியைக் கட்டமைத்துள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று சீசன்களில் பிகேஎல்லின் வெற்றிகரமான ரைடராக வலம் வரும் பவன் குமார் செஹ்ராவத்தை சுற்றி ஒரு திறன்மிகுந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் பெரிய போட்டிகளில் வெற்றி பெறவில்லை. வரவிருக்கும் சீசனில் பட்டத்தை வெல்ல ஏலத்தின் போது தரமான வீரர்களை வாங்குவதில் அவர்கள் கவனம் செலுத்துவதற்கு இதுவே காரணமாக இருந்தது. இந்த சீசன் தொடங்கும் முன், தமிழ் தலைவாஸின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.
Advertisment
Advertisements
அணியின் பலம்
பவன் செராவத் அணியின் மிகப்பெரிய பலமாக இருப்பார்
தமிழ் தலைவாஸின் மிகப்பெரிய பலம் இந்த முறை பவன் செராவத் தான். அவரது வருகையால், ரெய்டிங் பிரிவில் உள்ள மற்ற அணிகளுக்கு அந்த அணி கடும் சவாலை கொடுக்கும். ஒன்பதாவது சீசனின் ஏலத்தில், தலைவாஸ் பவன் செஹ்ராவத்தை லீக் வரலாற்றில் அதிக விலை கொண்ட வீரராக ரூ.2.26 கோடிக்கு ஏலம் எடுத்தது.
போட்டியின் வரலாற்றில் பவன் மிகப்பெரிய தொகையைப் பெற்றுள்ளதால், அதை தனது செயல்திறன் மூலம் நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கும். பவன் கடந்த மூன்று சீசன்களில் சிறந்த ரைடராக இருந்து வருகிறார். மேலும் தலைவாஸை முதல் முறையாக பட்டத்திற்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும் திறமை அவருக்கு உள்ளது. பவன் தனது ரிதத்தில் நிலைத்திருந்தால், அணியின் ரசிகர்கள் முதல் முறையாக மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பைப் பெறலாம்.
கடந்த சீசனில் இரண்டாவது சிறந்த டிஃபெண்டராக இருந்த சாகர் மீண்டும் தமிழ் தலைவாஸால் தக்கவைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சீசனில் எட்டு ஹை-5கள் உட்பட 83 டேக்கிள் புள்ளிகளை எடுத்தார். தொடக்கத்தில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், போட்டிகள் முன்னேறியபோது அவர் தனது வேகம் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் தலைவாஸ் இந்த முறை சாகர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. அவர் தான் மிகவும் ஆபத்தான டிஃபெண்டர் என்பதை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
அணியின் பலவீனம்
பவன் மற்றும் சாகரை மட்டும் அதிகம் சார்ந்து இருப்பது
பவன் செஹ்ராவத்துக்கு சொந்தமாக ஆட்டங்களை வெல்லும் திறன் இருந்தாலும், அவருக்கு இன்னும் மற்ற வீரர்களின் ஆதரவு தேவைப்படும். ஆனால் அவரைத் தவிர, அணியில் வேறு பெரிய ரைடர்கள் இல்லை. அவரின் உதவி ரெய்டராக அஜிங்க்யா பன்வார் இருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பவன் காயம் அடைந்தாலோ அல்லது அவரது ஃபார்ம் நன்றாக இல்லாமலோ இருந்தால், ரெய்டிங் பொறுப்பை அவரே கையாளும்படி அஜிங்க்யா பன்வாருக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். அஜிங்க்யா இதுவரை அசிஸ்ட் ரெய்டராகவே இருந்துள்ளார். எனவே பிரதான ரைடரின் பொறுப்பைக் கையாள்வது அவருக்கு சவாலாக இருக்கலாம். தமிழ் தலைவாஸின் முக்கிய குறைபாடுகளில் இதுவும் ஒன்று. அவர்கள் மற்றொரு ரைடரை அணியில் சேர்த்திருக்கலாம்.
அதே சமயம் டிஃபெண்ஸிலும் அந்த அணி சாகரையே அதிகம் நம்பியிருக்கிறது. பவன் செஹ்ராவத்தை 2 கோடிக்கு ஏலம் எடுத்ததால், தமிழ் தலைவாஸ் மற்ற இடங்களுக்கான வீரர்களை வாங்கிவதில் சிரமம் ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், சாகர் தோல்வியுற்றால், அணியின் டிஃபெண்ஸ் சரிந்துவிடும்.