Pro Kabaddi 2022 - Tamil Thalaivas Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் விரைவில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கான 5வது சீசனில் தமிழக தலைநகரான சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி உதயமானது. மஞ்சீத் சில்லர், ராகுல் சவுதாரி, அஜய் தாக்கூர், ஷபீர் பப்பு, ஜஸ்விர் சிங், மோஹித் சில்லர், ரன் சிங், சுர்ஜீத் சிங் மற்றும் மஞ்சீத் தஹியா உள்ளிட்ட பிரபல முகங்களை கொண்டுள்ள இந்த அணி, கடந்த நான்கு சீசன்களில் ஒருமுறை கூட பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
ஆனால், இந்தாண்டு நடைபெற இருக்கும் புரோ கபடி லீக் போட்டிக்கு, தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் மீண்டும் ஒரு வலுவான அணியைக் கட்டமைத்துள்ளது. இளம் மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட ஒரு சமபலம் பொருந்திய அணியாக பேப்பரில் தெரிகிறது. களத்தில் அணி பொறி பறக்க விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்போது நடப்பு சீசனுக்கான தமிழ் தலைவாஸ் அணியை பார்ப்போம்.
சாகர், அஜிங்க்யா அசோக் பவார், அபிஷேக் எம், ஹிமான்ஷு, ஹிமான்ஷு சிங், மோஹித், ஆஷிஷ், சாஹில், ஜதின், ஹிமான்ஷு, நரேந்தர், பவன் செஹ்ராவத், தனுஷன் லக்ஷ்மமோகன், எம்டி. ஆரிப் ரப்பானி, விஸ்வநாத் வி, அர்பித் சரோஹா, கே அபிமன்யு, மற்றும் அங்கிட் போன்றோர் உள்ளனர்.
இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு பவன் செராவத் கேப்டனாக இருப்பார் எனத் தெரிகிறது. தற்போது ஆடும் செவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
The season 9 squad is complete.
Approm ennapa, match-a aramipoma?#VivoPKLPlayerAuction#IdhuNammaAatam#VivoProKabaddi#TamilThalaivas pic.twitter.com/hvO6iw2bJa— Tamil Thalaivas (@tamilthalaivas) August 8, 2022
தமிழ் தலைவாஸ் ஆடும் செவன்:
9-வது புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் மும்பையில் நடந்தது. விறுவிறுப்பாக சென்ற இந்த ஏலத்தில், தமிழ் தலைவாஸ் அணி பவன் செஹ்ராவத்தை ரூ. 2.26 கோடிக்கு ஒப்பந்தம் செய்து, பிகேஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஒப்பந்தம் என்பதை பதிவு செய்தது.
கடந்த மூன்று புரோ கபடி லீக் சீசன்களில் செஹ்ராவத் நம்பர் ஒன் ரைடராக திகழ்ந்து வருகிறார். அவர் கடந்த சீசனில் பெங்களூரு புல்ஸை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்றார். மேலும் அவரது கேப்டன்சியின் கீழ், இந்திய ரயில்வே அணி மூன்று மூத்த தேசிய சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளது.
புரோ கபடியில் அவரது சிறப்பான சாதனையைப் பார்க்கும்போது, இந்த சீசனில் தமிழ் தலைவாஸின் முதுகெலும்பாக அவர் திகழ்வார் என்று நம்பலாம். ரெய்டிங் பிரிவில் இளம் ரெய்டர்களான அஜிங்க்யா பவார் மற்றும் ஹிமான்ஷு ஆகியோரின் திறன் அவருக்கு கைகொடுக்கும்.
What a man! 😮
He’s truly a hi-flyer, isn’t he?#VivoPKLPlayerAuction#IdhuNammaAatam#VivoProKabaddi#TamilThalaivas pic.twitter.com/GnYoI7NvFW— Tamil Thalaivas (@tamilthalaivas) August 10, 2022
அஜிங்க்யா பவார் கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக 18 போட்டிகளில் 108 ரெய்டு புள்ளிகளை அடித்தார். அதேசமயம் ஹிமான்ஷு 10 ஆட்டங்களில் ஒரு சூப்பர் ரெய்டு உட்பட 38 ரெய்டு புள்ளிகளை குவித்தார். சாகர் ரதீ மற்றும் விஸ்வநாத் வி இந்த சீசனில் அணியின் இரு கார்னர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பார்கள்.
ரைட் கார்னர் டிஃபென்டர் ரதி முந்தைய சீசனில் அதிக டிஃபென்டிங் புள்ளிகளைப் பெற்று, சிறந்த டிஃபென்டர் விருதைப் பெற்றார். இதேபோல், 69-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்திற்காக ஆல்ரவுண்ட் ஷோ மூலம் லெஃப்ட் கார்னர் டிஃபென்டர் விஸ்வநாத் வி ரசிகர்களை கவர்ந்தார்.
லெஃப்ட் கவர் டிஃபென்டர் மோஹித் கடந்த சீசனியில் தமிழ் தலைவாஸ் அணிக்காக 20 போட்டிகளில் 24 டிஃபென்டிங் புள்ளிகளைப் பெற்றார். எனவே, இந்த சீசனிலும் அவர் அதே பொசிஷனில் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த சீசனில் களமாடிய அபிஷேக் ஏழு ஆட்டங்களில் மட்டுமே விளையாடி, 12 டிஃபென்டிங் புள்ளிகளைப் பெற்றார். மோஹித் மற்றும் அபிஷேக்கின் மேம்பட்ட செயல்திறன் இந்த ஆண்டு அணி புள்ளிகள் பட்டியலில் முதல் 6 இடங்களுக்குள் முன்னேற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தலைவாஸ் களத்தில் ஆடும் செவன்:-
சாகர் ரதி (ரைட் கார்னர்), விஸ்வநாத் வி (லெஃப்ட் கார்னர்), அஜிங்க்யா பவார் (ரைட் இன்), ஹிமான்ஷு (லெஃப்ட் இன்), எம் அபிஷேக் (ரைட் கவர்), மோஹித் (லெஃப்ட் கவர்) மற்றும் பவன் குமார் செஹ்ராவத் ( சென்டர்).
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.