Advertisment

Pro Kabaddi: பெங்காலை பந்தாடிய தமிழ் தலைவாஸ்... 8-வது இடத்திற்கு முன்னேறி அசத்தல்!

புரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் நேற்று நடந்த 92வது போட்டியில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

author-image
WebDesk
New Update
Pro Kabaddi 2022: Tamil Thalaivas vs Bengal Warriors live updates in tamil

Tamil Thalaivas will play against the Bengal Warriors in match 92 of the Pro Kabbadi League on November 21 tamil news

Pro Kabaddi 2022: Tamil Thalaivas vs Bengal Warriors Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன.

இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

Advertisment

இந்நிலையில், புரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் நேற்று நடந்த 92வது போட்டியில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 43 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

இன்று ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி யு மும்பை அணியை எதிர்கொள்கிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Pro Kabaddi League Tamil Thalaivas Sports Pro Kabaddi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment