புரோ கபடி லீக்கில் குஜராத் ஜெய்ண்ட்ஸை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி, போராடி சமன் செய்துள்ளது.
புரோ கபடி லீக் 2022 சீசனின் 5 ஆவது போட்டியில், குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணி விளையாடின. தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனின் முதல் போட்டியில், இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
முதலில் தமிழ் தலைவாஸ் அணியின் ஷெராவத் ரெய்டு சென்றார். ஆனால் புள்ளிகள் ஏதும் இல்லாமல் திரும்பினார். குஜராத் அணி தனது கணக்கை போனஸ் புள்ளியுடன் தொடங்கியது. பின்னர் தமிழ் தலைவாஸ் வீரர் நரேந்தர் போன்ஸ் உடன் ஒரு புள்ளியைப் பெற்று அணியின் கணக்கைத் துவக்கினார். இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்று வந்தன.
குஜராத் அணி 11-7 என முன்னிலை பெற்ற நிலையில், தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆனதுடன், துரதிர்ஷ்டவசமாக தமிழ் தலைவாஸின் முக்கிய வீரர் பவன் ஷெராவத் காயம் காரணமாக வெளியேறினார். முதல் பாதி ஆட்டத்தில் குஜராத் அணி 18-16 என முன்னிலைப் பெற்று இருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் குஜராத்தை ஆல் அவுட் செய்து, தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை பெற்றது. இரு அணிகளும் அடுத்ததடுத்து புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற துடித்தன. இருப்பினும் இறுதியில் இரு அணிகளும் 31-31 என சமநிலைப் பெற்றன.
இதையும் படியுங்கள்: T20 World Cup: டி.கே-வுக்கு இடம் உறுதி; இந்தியா பிளேயிங் லெவன் இதுதானா?
தமிழ் தலைவாஸைப் பொறுத்த வரையில், சிறந்த ஆட்டக்காரர் பவன் செஹ்ராவத் தனது புதிய அணியுடன் சீசனை எவ்வாறு தொடங்குகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். பவன் செஹ்ராவத் லீக்கில் கணக்கிடப்பட வேண்டிய ஒரு சக்தியாக இருந்து வருகிறார், மேலும் புரோ கபடி வரலாற்றில் மூன்றாவது அதிக ரெய்டு புள்ளிகள் (986) எடுத்தவர் ஆவார். தனது அணிக்காக தனித்து போட்டிகளை வெல்லும் திறன் கொண்ட பவன் செஹ்ராவத்தை சமாளிக்க குஜராத் ஜெயண்ட்ஸ் திணறலாம்.
தமிழ் தலைவாஸ் அணியில் ரைடர் அஜிங்க்யா பவாரும் இருக்கிறார். பவார் கடந்த சீசனில் 108 ரெய்டு புள்ளிகளை அடித்தார் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் முக்கியமான புள்ளிகளை எடுத்து அசத்தினார். டிஃபண்ட்ஸை பொறுத்தவரை, சீசன் 8 இல் 82 தடுப்பாட்ட புள்ளிகளுடன் இரண்டாவது சிறந்த டிஃபெண்டராக இருந்த சாகர், முக்கிய வீரராக இருப்பார். கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக இருவரும் இணைந்து 54 தடுப்பாட்டப் புள்ளிகளைப் பெற்ற, சாகர் மோஹித் மற்றும் சாஹில் குலியா ஆகிய டிஃபென்ஸில் பலமாக இருப்பார்கள்.
குஜராத் அணியில் சந்திரன் ரஞ்சித், மகேந்திர ராஜ்புத் மற்றும் ரோஹித் குமார் ஆகிய அனுபவமிக்க 3 ரைடர்கள் உள்ளனர். இவர்களுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் உள்ள பர்தீப் குமார் மற்றும் ராகேஷ் ஆகியோரும் ரைடராகச் செல்லலாம். ரின்கு நர்வால், பல்தேவ் சிங் மற்றும் சந்தீப் கண்டோலா போன்ற வீரர்களை டிஃபண்டர்களைக் கொண்டுள்ளதால், குஜராத் ஜெயண்ட்ஸ் அனுபவம் வாய்ந்த டிஃபண்ட்ஸைக் கொண்டுள்ளது. இவர்கள் கடந்த காலங்களில் தரமான ரைடர்களை சிறப்பாகக் கையாண்டுள்ளனர். அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் தமிழ் தலைவாஸின் டைனமிக் தாக்குதலுக்கு எதிராக தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளனர்.
தமிழ் தலைவாஸ்
ரைடர்ஸ்: பவன் குமார் செராவத், அஜிங்க்யா அசோக் பவார், ஜதின், ஹிமான்ஷு, ஹிமான்ஷு சிங், நரேந்தர்.
டிஃபெண்டர்கள்: சாகர், அங்கித், எம்.அபிஷேக், ஆஷிஷ், எம்.டி. ஆரிப் ரப்பானி, ஹிமான்ஷு, மோஹித், சாஹில், அர்பித் சரோஹா.
ஆல்-ரவுண்டர்கள்: விஸ்வநாத் வி, தனுஷன் லக்ஷ்மமோஹா, கே அபிமன்யு.
குஜராத் ஜெயண்ட்ஸ்
ரைடர்ஸ்: டோங் ஜியோன் லீ, சந்திரன் ரஞ்சித், பர்தீப் குமார், ராகேஷ், மகேந்திர கணேஷ் ராஜ்புத், பூர்ணா சிங், சவின், சோனு, கௌரவ் சிகாரா, பார்தீக் தையா, சோஹித், சோனு சிங்
டிஃபெண்டர்கள்: ரிங்கு நர்வால், சந்தீப் கண்டோலா, யங் சாங் கோ, பல்தேவ் சிங், உஜ்வல் சிங், கபில், சவுரவ் குலியா, மனுஜ் வினோத் குமார்
ஆல்-ரவுண்டர்கள்: சங்கர் பீம்ராஜ், அர்கம் ஷேக், கடாய் ரோஹன் சிங்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.