புரோ கபடி லீக்; குஜராத் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

புரோ கபடி லீக் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் வெற்றி; 42-39 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது

புரோ கபடி லீக்; குஜராத் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற முக்கிய போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

9 ஆவது புரோ கபடி லீக் போட்டிகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதின.

தமிழ் தலைவாஸ் முந்தைய ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது. தமிழ் தலைவாஸ் இதுவரை ஏழு வெற்றிகள், ஏழு தோல்விகள் மற்றும் மூன்று டைகளைப் பதிவு செய்துள்ளது. நரேந்தர் 173 ரெய்டு புள்ளிகளுடன் தலைவாஸ் அணிக்காக சிறந்த ரைடராக இருந்துள்ளார். இதேபோல், அஜிங்க்யா பவார் 68, ஹிமான்ஷு சிங் 36 ரெய்டு புள்ளிகளை பெற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர். டிபென்ஸில் சாகர் 53 டேக்கிள் புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். இதேபோல், எம்.அபிஷேக் 28, சாஹில் குலியா 41 டேக்கிள் புள்ளிகளுடன் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

அதேநேரம், குஜராத் ஜெயண்ட்ஸ், ஐந்து வெற்றிகளை பெற்று, 10 தோல்விகளை சந்தித்துள்ளது. ராகேஷ் 126 ரெய்டு புள்ளிகளுடன் அட்டாக்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். பார்த்தீக் தையா மற்றும் சந்திரன் ரஞ்சித் முறையே 103 மற்றும் 82 ரெய்டு புள்ளிகளுடன் சிறப்பாக செயல்பட்டனர். சௌரவ் குலியா மற்றும் அர்கம் ஷேக் ஆகியோர் முறையே 26 மற்றும் 24 தடுப்பாட்ட புள்ளிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் 7 போட்டிகளில் மோதியுள்ளன. தமிழ் தலைவாஸ் இரண்டு முறையும், குஜராத் ஜெயண்ட்ஸ் நான்கு போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.

தமிழ் தலைவாஸ்

ரைடர்கள்: பவன் குமார் செஹ்ராவத் [காயமடைந்தவர்], அஜிங்க்யா அசோக் பவார், சச்சின், ஹிமான்ஷு நர்வால், ஹிமான்சு சிங், நரேந்தர்.

டிஃபெண்டர்கள்: சாகர், அங்கித், எம்.அபிஷேக், ஆஷிஷ், எம்.டி. ஆரிப் ரப்பானி, ஹிமான்ஷு, மோஹித், சாஹில் குலியா, அர்பித் சரோஹா.

ஆல்-ரவுண்டர்கள்: விஸ்வநாத் வி, தனுஷன் லக்ஷ்மமோஹா, கே அபிமன்யு

குஜராத் ஜெயண்ட்ஸ்

ரைடர்ஸ்: டோங் ஜியோன் லீ, சந்திரன் ரஞ்சித், பர்தீப் குமார், ராகேஷ், மகேந்திர கணேஷ் ராஜ்புத், ரோஹித் குமார், பூர்ணா சிங், சவின், சோனு, கௌரவ் சிகாரா, பார்தீக் தையா, சோஹித், சோனு சிங், முகமது கோர்பானி

டிஃபெண்டர்கள்: ரிங்கு நர்வால், சந்தீப் கண்டோலா, பல்தேவ் சிங், உஜ்வல் சிங், கபில், சவுரவ் குலியா, மனுஜ், விஜய் தங்கதுரை,

ஆல்-ரவுண்டர்கள்: சங்கர் கடாய், அர்கம் ஷேக், ரோஹன் சிங், பார்தீக் தையா

தமிழ் தலைவாஸ் அணியில் நரேந்தர் 8 ரெய்டு புள்ளிகளையும், அஜிங்கியா 7 ரெய்டு புள்ளிகளையும், இருவரும் தலா 5 போனஸ் புள்ளிகளையும் பெற்றனர். ஹிமான்ஷூ 2 டாக்கிள் புள்ளிகளை பெற்றார்.

குஜராத் அணியில், பர்தீக் தாஹியா 9 ரெய்டு புள்ளிகளையும், 1 போனஸ் புள்ளியையும் எடுத்தார். ரஞ்சித் 4 ரெய்டு புள்ளிகளையும், 3 போன்ஸ் புள்ளிகளையும் எடுத்தார். லீ 2 ரெய்டு புள்ளிகளையும், 4 டாக்கிள் புள்ளிகளையும் பெற்றார்.

இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி 42- 39 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Pro kabaddi 2022 tamil thalaivas vs gujarat giants match updates in tamil

Exit mobile version