புரோ கபடி லீக் 2022 இல் இன்றைய (சனிக்கிழமை) போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் மோதியது.
தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. புரோ கபடி லீக் 2022 புள்ளிகள் பட்டியலில் பத்து வெற்றிகள், ஏழு தோல்விகள் மற்றும் நான்கு டைகளுடன் தமிழ் தலைவாஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் தங்கள் கடைசி நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது, இதன் மூலம் தொடரை தக்கவைத்துள்ளது. இது புள்ளிகள் அட்டவணையில் முதல் நான்கில் ஒரு இடத்தை பதிவு செய்ய உதவும்.
இதையும் படியுங்கள்: IND vs BAN 3rd ODI Score: 182 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; கடைசி போட்டியில் இந்தியா அபார வெற்றி
ரெய்டில், நரேந்தர் 220 ரெய்டு புள்ளிகளுடன் அவர்களின் சிறந்த வீரராக இருந்தார். 114 ரெய்டு புள்ளிகளைக் கொண்ட அஜிங்க்யா பவாரும் தமிழ் தலைவாஸூக்கு ரெய்டில் பக்கபலமாக உள்ளார். சாகர் மற்றும் சாஹில் குலியா முறையே 53 மற்றும் 51 தடுப்பாட்ட புள்ளிகளுடன் அவர்களின் மிகவும் நிலையான டிஃபண்டர்களாக இருந்தனர்.
ஹரியானா ஸ்டீலர்ஸ் 56 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. அந்த அணி 9 ஆட்டங்களில் வெற்றி, 10 தோல்விகளை சந்தித்தது மற்றும் இரண்டு ஆட்டம் டையில் முடிவடைந்துள்ளது. ஹரியானா
தமிழ் தலைவாஸ்: பவன் செஹ்ராவத், அஜிங்க்யா அசோக் பவார், ஹிமான்ஷு, ஜதின், ஹிமான்ஷு, சாகர், சாஹில், எம்.அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு, ஆஷிஷ், எம்.டி ஆரிப் ரப்பன், அர்பித் சரோஹா, அங்கித், தனுஷன் லக்ஷ்மமோகன், விஸ்வநாத் வி, கே.அபிமன்யு.
ஹரியானா ஸ்டீலர்ஸ்: பிரபஞ்சன், ராகேஷ் நர்வால், மன்ஜீத், வினய், முகமது மஹல்லி, லவ்பிரீத் சிங், சுஷில், மீடூ, மனிஷ் குலியா, ஜோகிந்தர் நர்வால், ஜெய்தீப், மோஹித், அங்கித், மோனு, நவீன், ஹர்ஷ், சன்னி, அமீர்ஹோசைன் பஸ்தாமி, நிதின் ராவல்.
இன்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஹரியானா வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார். ஹரியானா வீரர் சுஷில் 10 ரெய்டு பாயிண்ட்களை எடுத்து அசத்தினார். ராகேஷ் 7 புள்ளிகளையும், வினய் 5 புள்ளிகளையும் ரெய்டில் எடுத்து அசத்தினர். நவீன் 6 டேக்கிள் புள்ளிகளையும், ஷெராவத் 4 டேக்கிள் புள்ளிகளையும் எடுத்தனர். மொத்தத்தில் ஹரியானா அணி 61 புள்ளிகளைப் பெற்றது.
தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் புள்ளிகள் சேர்த்தாலும், தடுப்பாட்டத்தில் சோபிக்காததால் தோல்வியைத் தழுவியது. ஹிமான்ஷூ 7 ரெய்டு புள்ளிகளையும், சச்சின் 6 மற்றும் விஸ்வநாத் 5 ரெய்டு புள்ளிகளையும் எடுத்தனர். டேக்கிளை பொறுத்தவரை சுஷில் 3 புள்ளிகளையும், ரப்பானி மற்றும் ஹிமான்ஷூ தலா 2 புள்ளிகளையும் பெற்றனர். மொத்தத்தில் தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளை மட்டுமே சேர்த்தது. இந்த வெற்றி மூலம் ஹரியானா அணி இந்த சீசனை வெற்றியுடன் முடித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil