Pro Kabaddi 2022, U Mumba vs Tamil Thalaivas Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்நிலையில், புரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் 94வது போட்டியில் தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பெங்காலை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்… தொடர் வெற்றியை ருசிக்குமா?
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 35-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி அசத்தல் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 38 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் தற்போது 43 புள்ளிகளுடன் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த உத்வேகத்தில் தமிழ் தலைவாஸ் அணி இன்றைய ஆட்டத்திலும் களமிறங்கும். ஏற்கனவே தொடர்ந்து இரண்டு தோல்வியைக் கண்டுள்ள யு மும்பா அணி வெற்றியைப் பதிவு செய்ய போராடும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. க்கு குறைவிருக்காது.
U Mumba vs Tamil Thalaivas, PKL 2022: போட்டி விவரங்கள்
போட்டி: யு மும்பா vs தமிழ் தலைவாஸ், புரோ கபடி 2022, போட்டி 94
தேதி - நேரம்: செவ்வாய், நவம்பர் 22, 2022, 7:30 PM IST
இடம்: கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஐதராபாத்
இரு அணி வீரர்கள் பட்டியல்:
யு மும்பா:
சுரீந்தர் சிங், கோலமபாஸ் கொரூக்கி, ஹரேந்திர குமார், சிவன்ஷ் தாக்கூர், ஷிவம், அங்குஷ், ஜெய் பகவான், ஹெய்டராலி எக்ராமி, பிரனய் வினய் ரானே, ரின்கு, ராகுல், கமலேஷ், மோஹித், கிரண் லக்ஷ்மன் மகார், குமன் சிங், ரூபேஷ், சச்சின், இளவரசர் மற்றும் சத்யவான்.
தமிழ் தலைவாஸ்:
சாகர், அர்பித் சரோஹா, மோஹித், அஜிங்க்யா அசோக் பவார், பவன் செஹ்ராவத், விஸ்வநாத் வி, அபிஷேக் எம், ஹிமான்ஷு, நரேந்தர், கே அபிமன்யு, தனுஷன் லக்ஷ்மமோகன், ஹிமான்ஷு சிங், ஆஷிஷ், சாஹில், ஜதின், எம்டி. ஆரிப் ரப்பானி, மற்றும் அங்கித்.
புரோ கபடி லீக் சீசன் 9வது தொடரில் தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையே கச்சிபௌலி உள் விளையாட்டரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி 34 புள்ளிகளையும், யு மும்பா அணியை 20 புள்ளிகளையும் பெற்றன. இதன் மூலம், தமிழ் தலைவாஸ் அணி 14 புள்ளிகள் வித்தியாசத்தில் யு மும்பா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
யு மும்பா vs தமிழ் தலைவாஸ் நேரலை ஒளிபரப்பு விவரங்கள்:
டிவி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் & ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட்
நேரலை ஸ்ட்ரீமிங்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil