pro-kabaddi-league | tamil-thalaivas: 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் வருகிற டிசம்பர் 2ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐ.பி.எல் தொடரைப் போலவே சொந்த மைதானம் மற்றும் எதிரணியின் மைதானம் என 12 அணிகள் மோதும் இந்த தொடர் 12 நகரங்களில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்க உள்ளது.
பி.கே.எல் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி. அணியை அகமதாபாத்தில் வருகிற டிசம்பர் 3ம் தேதி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் பயிற்சியாளர் அஷான் குமார் தலைமையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அரையிறுதி வரை சென்ற தமிழ் தலைவாஸ்
தமிழகத்தின் சென்னையை தளமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 5வது பி.கே.எல் தொடரில் அறிமுகமானது. அந்த சீசனில் பலத்த பின்னடைவை சந்தித்து இருந்தனர். அதன்பிறகு நடந்த நடந்த 3 சீசன்களிலும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை தான் தலைவாஸ் அணி பிடித்தது. ஆனால், கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட அணி பயிற்சியாளர் அஷன் குமாரின் தலைமையில் முதன்முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இருப்பினும், அரையிறுதியில் போராடி தோல்வியுற்றது.
தமிழ் தலைவாஸ் – தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி இளம் வீரர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ரைடர் நரேந்தர் கண்டோலா கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். காயமடைந்த பவன் செராவத்தின் இடத்தை நிரப்பிய அவர் 23 போட்டிகளில் 249 புள்ளிகளைப் பெற்றார். அண்மையில் நடந்து முடிந்த ஏலத்தில் எதிர்பார்த்தபடி, அவர் அணியிலேயே தக்கவைக்கப்பட்டார்.
இதேபோல், கேப்டனாக செயல்பட்ட சாகர் கடைசி இரண்டு சீசன்களில் அணியின் முக்கிய டிஃபன்ஸ் வீரராக இருந்துள்ளார். அவர், ஹிமான்ஷு, எம்.அபிஷேக் மற்றும் மோஹிர் ஆகியோர் அணியால் தக்கவைக்கப்பட்டனர். இதற்கிடையில், அணியின் அனுபவமிக்க ரைடர் அஜிங்க்யா பவாரும் இந்த ஆண்டு ஏலத்திற்கு முன்பே தக்கவைக்கப்பட்டார்.
— Tamil Thalaivas (@tamilthalaivas) November 9, 2023
ஏலத்தில் தமிழ் தலைவாஸ் எப்படி செயல்பட்டது?
பவன் செராவத்தை விடுவித்த பிறகு, அவருக்கு பதிலாக அனுபவமிக்க ரைடர் மீது அணி ஏலத்தில் பணத்தை செலவழிக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், தமிழ் தலைவாஸ் அணி அதைச் செய்யாமல் ஆச்சரியம் அளித்தது.
ரெய்டுகளில் தமிழக வீரர்களான மாசானமுத்து லக்ஷ்ணன், சதீஷ் கண்ணன் மற்றும் செல்வமணி கே ஆகியோரை அணி தேர்வு செய்தது. இதேபோல், ஈரானிய டிஃபெண்டர்களான அமீர்ஹோசைன் பஸ்தாமி மற்றும் முகமதுரேசா கபௌத்ரஹங்கி ஆகியோரை வசப்படுத்தியது.
தமிழ் தலைவாஸ் – அணி
ரைடர்ஸ் - அஜிங்க்யா பவார், ஹிமான்ஷு சிங், செல்வமணி கே, மாசானமுத்து லக்ஷ்ணன், சதீஷ் கண்ணன், ஜதின்
டிஃபென்டர் - சாகர், ஹிமான்ஷு, எம் அபிஷேக், சாஹில் குலியா, மோஹித், ஆஷிஷ், அமீர்ஹோசைன் பஸ்தாமி, முகமதுரேசா கபௌத்ரஹங்கி
ஆல்-ரவுண்டர் - ரித்திக்.
*Definitely gunning for the crown 💪💪💪#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas pic.twitter.com/Y4SFNgmO6V
— Tamil Thalaivas (@tamilthalaivas) November 7, 2023
தமிழ் தலைவாஸ் அணியின் உத்தேச ஆடும் 7
நரேந்திர கண்டோல், மோஹித் ஜாகர், எம் அபிஷேக், அஜிங்க்யா பவர், செல்வமணி கே, சாஹில் குலியா மற்றும் சாகர் ரதி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.