Advertisment

ப்ரோ கபடி பிளே ஆஃப்: தமிழ் தலைவாசுக்கு சான்ஸ் இருக்கா?

புள்ளிப்பட்டியலில் 69 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் புனேரி பல்டன் அணி பிளேஆஃப்க்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pro kabaddi 9 playoff scenario in tamil

PKL 9 playoff scenarios: How each team can qualify in Top 6 Tamil News

pro kabaddi 9: playoff scenario in tamil: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இந்த ஆட்டங்கள் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் உள்ள நிலையில், பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, 8 அணிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

Advertisment

புள்ளிப்பட்டியலில் 69 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் புனேரி பல்டன் அணி இந்த சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில், 63 புள்ளிகளுடன் 2வது உள்ள பெங்களூரு புல்ஸ் கிட்டத்தட்ட தகுதி பெறும் நிலையில் உள்ளது. பெரும்பாலான அணிகள் 5 ஆட்டங்களைக் கைவசம் வைத்துள்ளன. மீதமுள்ள அணிகள் பிளேஆஃப் இடங்களுக்காகப் போராடும் நிலையில் உள்ளன.

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும், மற்ற நான்கு அணிகள் எலிமினேட்டரில் போட்டியிடும். இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதியில் போட்டியிடுவார்கள்.

யார் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றது?

publive-image

புனேரி பல்டன். அந்த அணிக்கு இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், அவர்கள் முதலாவது அணியாக பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளனர்.

யார் வெளியேறியது?

தெலுங்கு டைட்டன்ஸ். புள்ளிப்பட்டியலில் இன்னும் முன்னேற வாய்ப்பில்லாமல், கடைசில் இடத்தில் இருந்தபடி தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

publive-image

இன்னும் மோதலில் உள்ள அணிகள்?

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ், யுபி யோதாஸ், தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ் <வாய்ப்பு கொஞ்சம் கஷ்டம்> மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் <வாய்ப்பு ரொம்ப கொஞ்சம் கஷ்டம்>.

பிளேஆஃப்க்கு தகுதி பெற இந்த அணிகளிடம் உள்ள வாய்ப்புகள் என்ன?

பிளேஆஃப் வாய்ப்பு:

பெங்களூரு புல்ஸ் - புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலை: 2

விளையாடியது: 18 | புள்ளிகள்: 63 | புள்ளிகள் வித்தியாசம்: 49

publive-image

மீதமுள்ள போட்டிகள்: நான்கு. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் <நவம்பர் 30>, யுபி யோதாஸ் <டிசம்பர் 4>, பாட்னா பைரேட்ஸ் <டிசம்பர் 7>, யு மும்பா <டிசம்பர் 10>

வாய்ப்பு: கிட்டத்தட்ட தகுதி பெற்றுள்ளனர்.

பெங்களூரு புல்ஸ் அணியினர் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை விட நான்கு புள்ளிகள் அதிகம். இருப்பினும் அவர்கள் ஒரு ஆட்டத்தை அதிகம் விளையாடியுள்ளனர். எனினும், அவர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்து, அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். மேலே குறிப்பிட்டுள்ளபடி, பேந்தர்ஸுக்கு எதிரான ஆட்டம் புள்ளிபட்டியலில் யார் முதலிடத்தில் முடிப்பது என்பதை தீர்மானிக்கும்.

முன்னதாக, இந்த சீசனில் பெங்களூரு புல்ஸ் அணியினர் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை அணியை வீழ்த்தி இருந்தனர். ஆனால், ஜெய்ப்பூர் அணியினரின் தற்போதைய ஃபார்ம் பெங்களூரு அணியினரை மிரட்டும் வகையில் உள்ளது.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலை: 3

விளையாடியது: 17 | புள்ளிகள்: 59 | புள்ளிகள் வித்தியாசம்: 94

மீதமுள்ள போட்டிகள்: ஐந்து. தெலுங்கு டைட்டன்ஸ் <நவம்பர் 28>, பெங்களூரு புல்ஸ் <நவம்பர் 30>, பெங்கால் வாரியர்ஸ் <டிசம்பர் 3>, ஹரியானா ஸ்டீலர்ஸ் <டிசம்பர் 5>, குஜராத் ஜெயண்ட்ஸ் <டிசம்பர் 9>

publive-image

வாய்ப்பு: அவர்கள் பிளேஆஃப்க்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுள்ளனர்.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது மற்றும் பெங்களூரு புல்ஸ் அணியை விட நான்கு புள்ளிகள் பின்தங்கி உள்ளது. அவர்களுக்கு இன்னும் ஐந்து ஆட்டங்கள் உள்ள நிலையில், ஓரிரு வெற்றிகள் நாக் அவுட்களில் இடம் பெறுவதை உறுதி செய்துவிடும்.

ஜெய்ப்பூர் அணியினர் கடந்த ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று, நல்ல பார்மில் உள்ளனர். அவர்கள் அரையிறுதியில் நேரடி இடத்தைப் பெறுவதற்காக, இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதை உறுதி செய்வதே இப்போது கவனம் செலுத்துவார்கள். நவம்பர் 30-ம் தேதி பெங்களூருவுக்கு எதிரான வெற்றி இதற்கு பெரிதும் உதவும்.

யுபி யோதாஸ்
புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலை: 4

விளையாடியது: 17 | புள்ளிகள்: 55 | புள்ளிகள் வித்தியாசம்: 45

மீதமுள்ள போட்டிகள்: ஐந்து. பெங்கால் வாரியர்ஸ் <நவம்பர் 28>, யு மும்பா <டிசம்பர் 2>, பெங்களூரு புல்ஸ் <டிசம்பர் 4>, தமிழ் தலைவாஸ் <டிசம்பர் 7>, புனேரி பால்டன் <டிசம்பர் 9>

வாய்ப்பு: பிளேஆஃப்க்கு தகுதி பெற மிக அதிகம்.

publive-image

யுபி யோதாஸ் அணியினர் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் நல்ல ஃபார்மில் உள்ளனர். பெங்களூரு புல்ஸ் மற்றும் புனேரி பால்டனுக்கு எதிரான அவர்களின் போட்டிகள் அவர்கள் முடிக்கும் இடத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த அணியில் பர்தீப் நர்வால் நல்ல ஃபார்மில் உள்ளார். சந்தீப் நர்வால் அணியில் சேர்ந்துள்ளார். சுரேந்தர் கில் விரைவில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் தலைவாஸ்

புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலை: 5

விளையாடியது: 18 | புள்ளிகள்: 53 | புள்ளிகள் வித்தியாசம்: -15

மீதமுள்ள போட்டிகள்: நான்கு. தபாங் டெல்லி <நவம்பர் 30>, தெலுங்கு டைட்டன்ஸ் <<டிசம்பர் 3>, உபி யோத்தாஸ் <டிசம்பர் 7>, ஹரியானா ஸ்டீலர்ஸ் <டிசம்பர் 10>

publive-image

வாய்ப்பு: பிளேஆஃப்க்கு தகுதி பெற நல்ல வாய்ப்பு உள்ளது.

இந்த சீசனில் தாமதமான கம்பேக் கொடுத்துள்ள தமிழ் தலைவாஸ் அணியினர், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முன்னேறவே நினைப்பார்கள். இருப்பினும், தொடக்க ஆட்டத்தில் காயமடைந்த பவன் செஹ்ராவத், அவருக்கு பதிலாக தற்போது கேப்டனாக இருக்கும் சாகர் ரதியின் காயம், பயிற்சியாளர் அஷன் குமாருக்கு விஷயங்களை சிக்கலாக்கக்கூடும்.

குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் அந்த அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால், அணியின் குறைவான புள்ளிகள் வித்தியாசம் கவலையளிக்கிறது. இந்த தொடரில் தமிழ் தலைவாஸ் ஒருபோதும் பிளேஆஃப்களுக்குச் செல்லவில்லை. அப்படி அவர்கள் செல்ல அவர்களின் மீதமுள்ள ஆட்டங்களை விரிவான முறையில் வெல்ல வேண்டும். மேலும் அந்த கனவை நனவாக்க அவர்களுக்கு மேலே உள்ள அணிகள் புள்ளிகளை வீழ்த்தும் என்று நம்பலாம்.

தபாங் டெல்லி
புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலை: 6

விளையாடியது: 18 | புள்ளிகள்: 51 | புள்ளிகள் வித்தியாசம்: 3

மீதமுள்ள போட்டிகள்: நான்கு. தமிழ் தலைவாஸ் <நவம்பர் 30>, புனேரி பல்டன் <டிசம்பர் 3>, யு மும்பா <டிசம்பர் 6>, பெங்கால் வாரியர்ஸ் <டிசம்பர் 8>

publive-image

வாய்ப்பு: அதிகம்

நடப்பு சாம்பியனான தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸுக்குப் பிறகு அதன் பட்டத்தை காக்கும் முதல் அணியாக மாற விரும்புகிறது. அதை அடைய அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒரு அம்சம் அவர்களின் நிலைத்தன்மை. ஒரு சிறந்த தொடக்கத்திற்குப் பிறகு, அவர்கள் எட்டு தோல்விகளை சந்தித்து, மீண்டும் ஒருவிதமான ரிதத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நவீன் குமாரின் ஃபார்ம் குறைந்துள்ளதால் விஜய் மாலிக் காயத்தில் இருந்து மீண்டு வருவது பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. அவர்களின் அடுத்த போட்டிகளில் ஒன்றிரண்டு வெற்றிகள் அவர்களை இரண்டாவது பட்டத்திற்கு நெருக்கமாக கொண்டு செல்லும். ஆனால் பெங்களூரு புல்ஸுக்கு எதிராக அவர்கள் செய்ததைப் போல ஒரு குறிப்பிட்ட வெற்றியை தூக்கி எறிவது உதவாது.

யு மும்பா
புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலை: 7

விளையாடியது: 17 | புள்ளிகள்: 49 | புள்ளிகள் வித்தியாசம்: -3

மீதமுள்ள போட்டிகள்: ஐந்து. ஹரியானா ஸ்டீலர்ஸ் <நவம்பர் 29>, உபி யோதாஸ் <டிசம்பர் 2>, குஜராத் ஜெயண்ட்ஸ் <டிசம்பர் 4>, தபாங் டெல்லி <டிசம்பர் 6>, பெங்களூரு புல்ஸ் <டிசம்பர் 10>

வாய்ப்பு: மிகவும் அதிகம்.

publive-image

யு மும்பா சரியான நேரத்தில் ஃபார்மிற்கு வந்துள்ளது. சனிக்கிழமை பெங்கால் வாரியர்ஸுக்கு எதிரான அவர்களின் வெற்றி - மூன்று தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு - போட்டியில் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் உள்ளது. குமான் சிங் மற்றும் ஆஷிஷ் ரெய்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். அதே சமயம் சுரிந்தர் சிங் இல்லாத நிலையில் ரின்கு நர்வால் டிஃபன்ஸ் பணியையே சிறப்பாக கையாண்டார். இருப்பினும், யு மும்பா, அட்டவணையில் தங்களுக்கு மேல் தரவரிசையில் உள்ள மூன்று அணிகளுடன் மோதும். அதில் இரண்டில் கூட வெற்றி பெற்றால் அவர்கள் பிளேஆஃப்களில் ஒரு இடத்தைப் பிடிக்கும்.

பெங்கால் வாரியர்ஸ்

புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலை: 8

விளையாடியது: 17 | புள்ளிகள்: 48 | புள்ளிகள் வித்தியாசம்: 32

மீதமுள்ள போட்டிகள்: ஐந்து. உபி யோதாஸ் <நவம்பர் 28>, ஹரியானா ஸ்டீலர்ஸ் <டிசம்பர் 2>, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் <டிசம்பர் 3>, தபாங் டெல்லி <டிசம்பர் 8>, பாட்னா பைரேட்ஸ் <டிசம்பர் 10>

publive-image

வாய்ப்பு: மிகவும் அதிகம்.

தற்போது அந்த அணியினர் உள்ள ஃபார்மை அபடியே தொடரும் பட்சத்தில், பெங்கால் வாரியர்ஸ் பிளேஆஃப்களுக்குச் செல்வதில் முதன்மையான அணிக்காயாக இருக்கும். அந்த அணி தபாங் டெல்லியில் இருந்து மூன்று புள்ளிகள் மட்டுமே உள்ளனர். அவர்கள் ஒரு ஆட்டத்தை அதிகமாக விளையாடி ஆறாவது இடத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் அதில் நம்பிக்கை வைப்பார்கள். அவர்கள் மிகவும் சாதகமான புள்ளிகள் வித்தியாசத்தைக் கொண்டுள்ளனர் மற்றும் கடைசி ஆறிற்குள் செல்ல மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

பாட்னா பைரேட்ஸ்

புள்ளிப்பட்டியல் தற்போதைய நிலை: 9

விளையாடியது: 18 | புள்ளிகள்: 48 | புள்ளிகள் வித்தியாசம்: -36

மீதமுள்ள போட்டிகள்: நான்கு. குஜராத் ஜெயண்ட்ஸ் <டிசம்பர் 2>, புனேரி பல்டன் <டிசம்பர் 5>, பெங்களூரு புல்ஸ் <டிசம்பர் 7>, பெங்கால் வாரியர்ஸ் <டிசம்பர் 10>

publive-image

வாய்ப்பு : மிகவும் குறைவு.

இனி இருக்கும் ஒவ்வொரு ஆட்டமும் பாட்னா பைரேட்ஸ் அணிக்கு கட்டாயம் வெல்ல ஆட்டமாக உள்ளது. பிகே எல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியான அந்த அணி தற்போது மோசமான முடிவுகளின் தொடர்ச்சியில் தத்தளிக்கிறது. அவர்களின் கடைசி ஆறு ஆட்டங்களில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளனர்.

மொஹமத்ரேசா ஷாட் லூயி அண்ட் கோ, நான்காவது பட்டத்தில் ஒரு உண்மையான ஷாட்டைப் பெற வேண்டுமானால், பெரிய அளவில் முன்னேற வேண்டும். அவர்கள் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸுடன் புள்ளிகளில் சமநிலையில் உள்ளனர். ஆனால் கூடுதல் ஆட்டத்தில் விளையாடியுள்ளனர். இரு அணிகளும் வெற்றி பெற்றால், பைரேட்ஸ் அணியின் நம்பிக்கை தோற்கடிக்கப்படும்.

ஹரியானா ஸ்டீலர்ஸ்

புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலை: 10

விளையாடியது: 17 | புள்ளிகள்: 41 |புள்ளிகள் வித்தியாசம்: -18

மீதமுள்ள போட்டிகள்: ஐந்து. யு மும்பா <நவம்பர் 29>, பெங்கால் வாரியர்ஸ் <டிசம்பர் 2>, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் <டிசம்பர் 5>, தெலுங்கு டைட்டன்ஸ் <டிசம்பர் 8>, தமிழ் தலைவாஸ் <டிசம்பர் 10>

வாய்ப்பு: மிகக் குறைவு.

publive-image

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியினர் அட்டவணையில் தங்களுக்கு மேலே உள்ள நான்கு அணிகளுக்கு எதிராக அவர்களுக்கு முன்னால் கடினமான ஆட்டங்கள் உள்ளன. அவர்கள் கையில் ஒரு ஆட்டம் உள்ளது. ஆனால் வெற்றி பெற்றால் கூட பாட்னா பைரேட்ஸ் அணிக்கு இரண்டு புள்ளிகள் ஆறுதலாகவே இருக்கும். ஒரு அதிசயமும் நடக்கப்போதில்லை, அவர்களின் பிளேஆஃப் நம்பிக்கைகள் முடிந்தது.

குஜராத் ஜெயண்ட்ஸ்

புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலை: 11

விளையாடியது: 17 | புள்ளிகள்: 36 | புள்ளிகள் வித்தியாசம்: -50

மீதமுள்ள போட்டிகள்: ஐந்து. புனேரி பால்டன் <நவம்பர் 29>, பாட்னா பைரேட்ஸ் <டிசம்பர் 2>, யு மும்பா <டிசம்பர் 4>, தெலுங்கு டைட்டன்ஸ் <டிசம்பர் 6>, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் <டிசம்பர் 9>

வாய்ப்பு: கிட்டத்தட்ட எதுவும் இல்லை.

publive-image

ராம் மெஹர் சிங் பிகேஎல்-லில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக இருக்கலாம். ஆனால் இந்த அணிக்கு எந்த வெற்றியும் இல்லை. முக்கிய வீரர்களின் காயங்களால் அவர்கள் சிதைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கடைசி 5 போட்டிகள் உட்பட கடைசி 10 போட்டிகளில் 8ல் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் பூஜ்ஜியமே.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Pro Kabaddi Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment