Pro Kabaddi 2018 Final Live Score Streaming, Bengaluru Bulls vs Gujarat Fortunegiants:: புரோ கபடி இறுதிப் போட்டியில் இன்று பெங்களூரு புல்ஸ் அணியும், குஜராத் பார்ச்சூன் கியண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியை ஆன் லைனில் இலவசமாக கண்டு களிக்க முடியுமா? விவரங்களுக்கு கீழே படியுங்கள்.
புரோ கபடி 6-வது சீசன் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தன. இதில் தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்த தமிழ் தலைவாஸ் அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. இறுதிப் போட்டிக்கு பெங்களூரு புல்ஸ் அணி, குஜராத் பார்ச்சூன் கியண்ட்ஸ் அணிகள் தகுதி பெற்றன. இறுதிப் போட்டி இன்று இரவு நடக்கிறது.
இந்தத் தொடரில் இரு அணிகளும் 3 முறை மோதின. அவற்றில் இரண்டும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. ஒரு போட்டி ‘டை’ ஆனது. முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி, குஜராத் பார்ச்சூன் கியண்ட்ஸ் அணியை வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
குஜராத் பார்ச்சூன் கியண்ட்ஸ் அணி 2-வது வெளியேற்றுதல் சுற்றில் உ.பி. யோத்தா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்தது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. எனவே இன்றைய இறுதி ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
குஜராத் அணியில் சச்சின் தன்வார் கவனிக்கப்படுகிற வீரராக இருக்கிறார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி வந்திருக்கும் அவர், பெங்களூருக்கு எதிரான கடந்த ஆட்டத்திலும் 10 ரைடு புள்ளிகளை எடுத்தார். பெங்களூரு அணிக்கு அந்த அணி கேப்டன் ரோஹித் குமார் துருப்புச் சீட்டாக இருப்பார். இந்தப் போட்டி தொடர்பான மேலும் சில விவரங்கள் இங்கே...
Pro Kabaddi League 2018 Final Live Score Streaming Online: இறுதிப் போட்டியை ஒளிபரப்பும் சேனல்கள்
இறுதிப் போட்டி எங்கு, எப்போது நடக்கிறது?
குஜராத் பார்ச்சூன் கியண்ட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் இடையிலான புரோ கபடி இறுதிப் போட்டி நடைபெறும் இடம் சர்தார் வல்லபாய் படேல் உள் விளையாட்டரங்கம், மும்பை. போட்டி இன்று (ஜனவரி 5) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இறுதிப் போட்டியை ஒளிபரப்பும் சேனல்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 ஹெச்.டி., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்.டி. 2.
ஆன் லைனில், ‘ஹாட் ஸ்டார்’-லும் போட்டியை ‘லைவ்’வாக காணலாம்.